மலேசிய கூட்டரசு சாலை 17 Malaysia Federal Route 17 Laluan Persekutuan Malaysia 17 | |
---|---|
பாசிர் கூடாங் நெடுஞ்சாலை Pasir Gudang Highway Jalan Lapangan Pasir Gudang | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 30.4 km (18.9 mi) |
பயன்பாட்டு காலம்: | 1977 – |
வரலாறு: | கட்டுமானம் 1979 |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | தாமான் பெர்லிங் |
சுகூடாய் நெடுஞ்சாலை J3 கெம்பாஸ் நெடுஞ்சாலை AH18 ஜொகூர் பாரு-கோத்தா J10 மாசாய் லாமா சாலை பெர்மாஸ் ஜெயா-பாசிர் கூடாங் செனாய்-தெசாரு | |
கிழக்கு முடிவு: | தஞ்சோங் லங்சாட் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | தம்போய்; கெம்பாஸ்; தெப்ராவ்; ஜொகூர் ஜெயா; பிளந்தோங்; பண்டார் செரி ஆலாம் ; மாசாய் நகரம்; பாசிர் கூடாங்; ஜொகூர் துறைமுகம் பாசிர் பூத்தே கிராமம் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மலேசிய கூட்டரசு சாலை 17 அல்லது பாசிர் கூடாங் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 17 அல்லது Pasir Gudang Highway; மலாய்: Laluan Persekutuan Malaysia 17 அல்லது Jalan Pasir Gudang) என்பது தீபகற்ப மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலை ஆகும்.[1]
இந்தச் சாலை மேற்கில் தம்போய் நகரத்தையும்; கிழக்கில் பாசிர் கூடாங் நகரத்தையும்; மற்றும் தஞ்சோங் லாங்சாட் நகரத்தையும் இணைக்கிறது.[2]
30.4 கிமீ (18.9 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை ஜொகூர் பாரு; பாசிர் கூடாங் பகுதிகளில் மிக முக்கியமான சாலையாகச் செயல்படுகிறது.
பாசிர் கூடாங் நெடுஞ்சாலை என்பது நான்கு வழிப் பாதைகளைக் கொண்ட நெடுஞ்சாலை ஆகும்; இருப்பினும் இதற்கு மிக அருகில் உள்ள சுகூடாய் நெடுஞ்சாலை ஆறு வழிகளைக் கொண்ட பரந்தநிலை நெடுஞ்சாலை என அறியப்படுகிறது.
இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான சரக்கு சுமையுந்துகள் செல்கின்றன. பாசிர் கூடாங் நெடுஞ்சாலை, ஜொகூர் பாருவை பாசிர் கூடாங்கை இணைக்கும் சாலை அமைப்பின் முதுகெலும்பாக உள்ளது.
இதற்கு முன்னர் செனாய்-தெசாரு விரைவுச்சாலையும்; ஜொகூர் பாரு கிழக்கு கடற்கரைச் சாலை 35; ஆகிய இரு சாலைகளும் பாசிர் கூடாங்கிற்கான முதனமைச் சாலைகளாக விளங்கின.
மலேசிய கூட்டரசு சாலை 16-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது தம்போய் நகரத்தில் உள்ளது.
மலேசிய கூட்டரசு சாலை 16-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3]
1977-இல் ஜொகூர் துறைமுகம் திறக்கப்பட்டதும், ஜொகூர் பாருவிலிருந்து பாசிர் கூடாங் வரையிலான புதிய நெடுஞ்சாலை கட்டப்பட்டது. நெடுஞ்சாலையின் கட்டுமானம் 1977-இல் தொடங்கப்பட்டு 1979-இல் நிறைவடைந்தது.