பாசிர் கூடாங் (P159) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Pasir Gudang (P159) Federal Constituency in Johor | |
பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி (P159 Pasir Gudang) | |
மாவட்டம் | ஜொகூர் பாரு மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 198,485 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பாசிர் கூடாங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பாசிர் கூடாங்; பிளந்தோங்; மாசாய் நகரம் |
பரப்பளவு | 148 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | அசன் அப்துல் கரீம் (Hassan Abdul Karim) |
மக்கள் தொகை | 534,659 (2023)[4][5] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pasir Gudang; ஆங்கிலம்: Pasir Gudang Federal Constituency; சீனம்: 巴西古当国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P159) ஆகும்.[6]
பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
பாசிர் கூடாங், ஜொகூர் மாநிலத்தில் ஜொகூர் பாரு மாவட்டத்தில்; அமைந்துள்ள ஒரு மாநகரம். இது ஒரு தொழில்துறை நகரமாகும். போக்குவரத்துத் தளவாடங்கள் உற்பத்தி; கப்பல் கட்டுதல்; இரசாயனப் பொருகள் உற்பத்தி; கனரகத் தொழில்கள்; எண்ணெய் பனை சேமிப்பு; விநியோகம் ஆகியவை இந்த நகரத்தின் முக்கிய தொழில்கள் ஆகும்.[8]
கம்போங் உலு எனும் இடத்தில் இருந்த ஒரு மணல் சுரங்கத்தில் இருந்து, பாசிர் கூடாங் என்ற பெயர் உருவாகி இருக்கலாம் என்று அறியப் படுகிறது. மலாய் மொழியில் பாசிர் என்றால் மணல். கூடாங் என்றால் பொருள் சேமிப்புக் கட்டடம். அந்த வகையில் இந்த இடத்திற்குப் 'பாசிர் கூடாங்' என்று பெயர் வந்து இருக்கலாம் என்றும் அறியப் படுகிறது.
பாசிர் கூடாங் பகுதியில் 1890-ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் குடியேறி விட்டார்கள். ஏறக்குறைய 130 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். 1916-ஆம் ஆண்டு வரையில், 15,000 ஏக்கர் (61 சதுர கி.மீ.) பரப்பளவு கொண்ட ஆறு ரப்பர், காபித் தோட்டங்கள் பாசிர் கூடாங்; பிளந்தோங் பகுதிகளில் திறக்கப் பட்டன.[9]
பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பாசிர் கூடாங் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P159 | 2004–2008 | முகமட் காலிட் நோர்டின் (Mohamed Khaled Nordin) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | நோர்மலா அப்துல் சமாட் (Normala Abdul Samad) | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | அசன் அப்துல் கரீம் (Hassan Abdul Karim) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அசன் அப்துல் கரீம் (Hassan Abdul Karim) | பாக்காத்தான் அரப்பான் | 71,233 | 47.72 | 10.96 ▼ | |
முகமட் பாரிட் அப்துல் ரசாக் (Mohamad Farid Abdul Razak) | பெரிக்காத்தான் நேசனல் | 39,675 | 26.58 | 26.58 | |
நூர் அசுலான் அம்புரோஸ் (Noor Azlen Ambros) | பாரிசான் நேசனல் | 37,369 | 25.03 | 10.10 ▼ | |
முகமட் ரபி பிராம் (Mohammad Rafi Bram) | தாயக இயக்கம் | 1,003 | 0.67 | 0.67 | |
மொத்தம் | 1,49,280 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 1,49,280 | 98.94 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,596 | 1.06 | |||
மொத்த வாக்குகள் | 1,50,876 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,98,485 | 75.21 | 10.62 ▼ | ||
Majority | 31,558 | 21.14 | 2.41 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [11] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)