பாசிர் சாலாக் (P073) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Pasir Salak (P073) Federal Constituency in Perak | |
மாவட்டம் | பேராக் தெங்கா மாவட்டம் ஈலிர் பேராக் மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 174,761 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | பாசிர் சாலாக் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | பாசிர் சாலாக், கம்போங் காஜா, ஆயர் தாவார், தஞ்சோங் துவாலாங், லங்காப், தெலுக் இந்தான் |
பரப்பளவு | 1,064 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சமாலுதீன் யாகயா (Jamaluddin Yahya) |
மக்கள் தொகை | 80,485 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pasir Salak; ஆங்கிலம்: Pasir Salak Federal Constituency; சீனம்: 巴西沙叻国会议席) என்பது மலேசியா, பேராக், பேராக் தெங்கா மாவட்டம் (Perak Tengah District); ஈலிர் பேராக் மாவட்டம் (Hilir Perak District) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P073) ஆகும்.[7]
பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பாசிர் சாலாக் நகரம், பேராக், பேராக் தெங்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமப்பகுதி; மற்றும் ஒரு வரலாற்று வளாகமாகவும் அறியப்படுகிறது.
இந்தக் கிராமத்திதான் பிரித்தானிய முதல்வர் ஜேம்ஸ் பர்ச் (James Birch); மகாராஜா லேலா என்பவரால் 1875 நவம்பர் மாதம் 2-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். ஜேம்ஸ் பர்ச் பேராக் மாநிலத்தின் முதல் பிரித்தானிய முதல்வராக அனுப்பப்பட்டவர். அதன் பின்னர் பேராக் போர் நடந்தது.[8]
உள்ளூர் மலாய்த் தலைவர்கள் மகாராஜா லேலா மற்றும் செபுண்டம் ஆகியோரின் சதியின் விளைவால் அந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பிரித்தானிய இராணுவத் தலையீட்டின் மூலம் பிரச்சினை தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்வு மலாயா மக்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.[9]
பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1984-ஆம் ஆண்டில் ஈலிர் பேராக் தொகுதியில் இருந்து பாசிர் சாலாக் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P067 | 1986–1990 | மெகாட் ஜூனிட் மெகாட் அயூப் (Megat Junid Megat Ayub) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P070 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | ரம்லி நிகா தாலிப் (Ramli Ngah Talib) | ||
11-ஆவது மக்களவை | P073 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | தஜுடின் அப்துல் ரகுமான் (Tajuddin Abdul Rahman) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | சமாலுதீன் யாகயா (Jamaludin Yahya) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
74,761 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
58,217 | 76.27% | + 5.14% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
57,023 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
309 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
885 | ||
பெரும்பான்மை (Majority) |
5,003 | 8.77% | ▼ - 8.98 |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [10] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
சமாலுதீன் யாகயா (Jamaludin Yahya) |
பெரிக்காத்தான் | 57,023 | 24,897 | 43.66% | + 43.66% | |
கைருல் அசுவான் அருன் (Khairul Azwan Harun) |
பாரிசான் | - | 19,894 | 34.89% | - 11.15 % ▼ | |
நிக் உமர் நிக் அப்துல் அசீஸ் (Nik Omar Nik Abdul Aziz) |
பாக்காத்தான் | - | 11,693 | 20.51% | - 7.78% ▼ | |
சைரோல் இசாம் சகாரியா (Zairol Hizam Zakaria) |
தாயக இயக்கம் | - | 549 | 0.95% | + 0.95% |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)