Passu
پسو | |
---|---|
![]() பாக்கித்தானின் பாசுசுவில் உள்ள காரகோரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள துபோப்டான் மற்றும் கன்சா ஆறு | |
ஆள்கூறுகள்: 36°28′N 74°54′E / 36.467°N 74.900°E | |
நேர வலயம் | ஒசநே+5 |
பாசு ( Passu ) என்பது பாக்கித்தானின் வடக்கு நிலங்கள் எனப்படும் கில்கித் பால்டிஸ்தானின் கோஜல் பள்ளத்தாக்கிற்கு மேல் கன்சா என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். கன்சா பள்ளத்தாக்கிலுள்ள காரகோரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இதன் எளிதில் அணுகக்கூடிய பரந்த நிலப்பரப்புகள் மற்றும் 7,478 மீ (24,534 அடி) உயரமான பாசு சர் மலை, பாசு பனிப்பாறை மற்றும் துபோப்டன் [டி] 6,106 மீ (20,033 அடி) ஆகியவற்றின் காட்சிகள் காரணமாக[1] இது, பாக்கித்தானிலுள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது.
கில்கித்-பால்டிஸ்தானில் உள்ள கோஜல் வட்டத்தின் தலைமையகமான குல்மிட்டிலிருந்து[2] சுமார் 20 கிலோமீட்டர்கள் (12 மை) தொலைவில், கில்கித்திலிருந்து சுமார் 147 கிலோமீட்டர்கள் (91 மை) தொலைவில் கன்சா ஆற்றங்கரையில் பாசு அமைந்துள்ளது.
இது பாசு பனிப்பாறை அடுக்குக்கு மிக அருகில் உள்ளது. மேலும் பதுரா பனிப்பாறை அடுக்கின் தெற்கே அமைந்துள்ளது. பிந்தையது 56 கிலோமீட்டர்கள் (35 மைல்) தொலைவில் உள்ள உலகின் ஏழாவது நீளமான துருவப் பனிப்பாறை ஆகும். மேலும் இது நெடுஞ்சாலைக்கு மிக அருகில் உள்ளது. இப்பகுதியில் உள்ள உசைனி கிராமத்திற்கு கீழே உள்ள போரித் ஏரி ஒரு பெரிய நீர்நிலையாகும்.[3]
6,106 மீட்டர் (20,033 அடி) உயரத்தில் அமைந்துள்ள துபோப்டன் என்ற பகுதி பாசு கோன்ஸ் அல்லது 'பாசு கதீட்ரல்' என்றும் அழைக்கப்படுகிறது. இது கோஜல் பள்ளத்தாக்கில் உள்ள குல்மிட் கிராமத்திற்கு வடக்கே அமைந்துள்ளது. இதன் அமைவிடம் காரணமாக இப்பகுதியில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட சிகரமாக உள்ளது.[4] பாசு சர், சிஸ்பேர் சர் மற்றும் பதுரா போன்ற உயரமான சிகரங்களும் இதன் அருகிலேயே உள்ளன.
இஸ்மாயிலிகளின், சியா இசுலாத்தின் ஒரு பிரிவினரான இப்பகுதியில் வசிக்கும் வாக்கி மக்கள் [5] பெரும்பான்மையாக வாக்கி மொழியைப் பேசுகிறார்கள்.
The inhabitants of this austere landscape, many of them ethnic Wakhi farmers, have learned to trap this explosive blessing through the filter of grass.