பாச்சோக் (P025) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Bachok (P025) Federal Constituency in Kelantan | |
![]() பாச்சோக் மக்களவைத் தொகுதி (P025 Bachok) | |
மாவட்டம் | ![]() ![]() |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 123,965 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | பாச்சோக் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா பாரு, பெங்காலான் செப்பா, பாச்சோக், ரந்தாவ் பாஞ்சாங், பாசிர் பூத்தே |
பரப்பளவு | 279 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமது சியாகிர் சே சுலைமான் (Mohd Syahir Che Sulaiman) |
மக்கள் தொகை | 157,291 (2020)[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
பாச்சோக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bachok; ஆங்கிலம்: Bachok Federal Constituency; சீனம்: 万捷国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், பாச்சோக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P025) ஆகும்.[8]
பாச்சோக் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து பாச்சோக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
பாச்சோக் நகரம் கிளாந்தான் மாநிலத்தில், பாச்சோக் மாவட்டத்தில் (Bachok District) அமைந்துள்ள நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
மாவட்டத்தின் பெயரும் பாச்சோக் ஆகும். மலாய் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சீனர் மற்றும் சயாமியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
பாச்சோக் நகரமும்; கிளாந்தான் மாநிலமும் தாய்லாந்து நாட்டுக்கு மிக அருகில் இருப்பதால் தாய்லாந்து நாட்டின் மொழி, பண்பாட்டுத் தாக்கங்களும் இங்கு அதிகமாக உள்ளன. கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
பாச்சோக் நகரம்; பாச்சோக் மாவட்டத்தின் நிர்வாகம், வணிகம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் மையமாகும்.[10]
இந்த நகரத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்தது. குறிப்பிடத்தக்க அளவிற்கு மீன்பிடித் தொழிலும் உள்ளது. பாச்சோக் நகரம் அல்லது பண்டார் பச்சோக் (Bandar Bachok) அண்மையில் இசுலாமிய சுற்றுலா நகரமாக (Islamic Tourism Town) அறிவிக்கப்பட்டது.
பாச்சோக் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் பாச்சோக் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P019 | 1959–1963 | சுல்கிப்லீ முகமது (Zulkiflee Muhammad) |
மலேசிய இசுலாமிய கட்சி |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மக்களவை | P019 | 1963–1964 | சுல்கிப்லீ முகமது (Zulkiflee Muhammad) |
மலேசிய இசுலாமிய கட்சி |
2-ஆவது மக்களவை | 1964 | |||
1964–1969 | அபுபக்கர் அம்சா (Abu Bakar Hamzah) | |||
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[11] | |||
3-ஆவது மக்களவை | P019 | 1971–1973 | முகமது சைன் அப்துல்லா (Mohd. Zain Abdullah) |
மலேசிய இசுலாமிய கட்சி |
1973–1974 | பாரிசான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
4-ஆவது மக்களவை | P020 | 1974–1978 | பாரிசான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
5-ஆவது மக்களவை | 1978–1982 | மலேசிய இசுலாமிய கட்சி | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P023 | 1986–1990 | பாரிசான் நேசனல் (அமீம்) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | புனியாமின் யாகோப் (Buniyamin Yaakob) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
9-ஆவது மக்களவை | P025 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | வான் நிக் வான் யூசோப் (Wan Nik Wan Yusoff) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | அவாங் அடேக் உசின் (Awang Adek Hussin) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | நசாருதீன் மாட் ஈசா (Nasharudin Mat Isa) |
பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | அகமத் மர்சுக் சாரி (Ahmad Marzuk Shaary) | ||
14-ஆவது மக்களவை | 2018–2020 | நிக் முகமது அப்து நிக் அப்துல் அசீஸ் (Nik Mohamad Abduh Nik Abdul Aziz) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | முகமது சியாகிர் சே சுலைமான் (Mohd Syahir Che Sulaiman) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
123,183 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
91,223 | 74.03% | ▼ - 7.98% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
89,913 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
260 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,019 | ||
பெரும்பான்மை (Majority) |
30,163 | 33.55% | ![]() |
வெற்றி பெற்ற கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[12] |
கட்சி | வேட்பாளர் | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | முகமது சியாகிர் சே சுலைமான் (Mohd Syahir Che Sulaiman) |
89,913 | 57,496 | 63.95% | + 15.02% ![]() | |
பாரிசான் நேசனல் | முகமது சைன் யாசிம் (Mohd Zain Yasim) |
- | 27,333 | 30.40% | - 14.08% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | நூர் அசுமிசா மாமத் (Nur Azmiza Mamat) |
- | 4,385 | 4.88% | - 2.12 % ▼ | |
சுயேச்சை | முகமது சுல்கிப்லி சகாரியா (Mohd Zulkifli Zakaria) |
- | 423 | 0.47% | + 0.47% ![]() | |
பூமிபுத்ரா கட்சி | கமருல் அசம் ஒசுமான் (Kamarul Azam Osman) |
- | 276 | 0.31% | + 0.31% ![]() |