பாஜம் | |
---|---|
Pajam | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°51′N 101°51′E / 2.850°N 101.850°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | சிரம்பான் மாவட்டம் |
தொகுதி | பாஜம் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாடு இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 71700 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-06 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
பாஜம் (மலாய்: Pajam; ஆங்கிலம்: Pajam; என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலம், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறுநகரம். இந்த நகரம் நெகிரி செம்பிலான் - சிலாங்கூர் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.[1]
சிரம்பான் தொடருந்து சேவையின் (KTM Komuter) வழியாக இந்த நகரம் சிரம்பான்; கோலாலம்பூர் நகருரங்களுடன் இணைக்கப் படுகிறது. மந்தின்; செமினி, காஜாங் நகரங்களை இணைக்கும் சிட்டிலைனர் (Cityliner) பேருந்து சேவையும் உள்ளது.
பாஜம் வட்டாரத்தில் பல ரப்பர், எண்ணெய்ப்பனைத் தோட்டங்கள் இருந்தன. இந்த நகரில் முன்பு அதிகமான தமிழர்கள் வாழ்ந்தனர். சிறு தொழில்கள், சிறு வியாபாரங்கள், உணவகங்கள், மளிகைக் கடைகள், துணிமணிக் கடைகள் போன்றவற்றை நடத்தி வந்தனர்.
சில பத்தாண்டுகளுக்கு முன்னர், பாஜம், மந்தின், நீலாய் நகரங்களைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள், செம்பனைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் இருந்தன.
அண்மைய காலங்களில் அந்தத் தோட்டப் பகுதிகளில் மிகுதியான நில மேம்பாட்டுத் திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்கள், தொழில்துறை திட்டங்கள் உருவாக்கம் பெற்றன. அதனால், தோட்டப் புறங்களில் வாழ்ந்த தமிழர்கள் நகர்ப் புறங்களுக்கு மாறிச் சென்று விட்டனர்.[2]
இந்தத் தோட்டங்களில் ஒரு சில வயதான தமிழர்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனர். ஓரளவுக்கு கல்வி தகுதியுடைய இளைஞர்கள் சிரம்பான், காஜாங் போன்ற நகர்களில் பணி புரிகின்றனர். பட்டம் பெற்ற இளைஞர்கள் கோலாலம்பூர், ஜொகூர் பாரு, பெட்டாலிங் ஜெயா, சிங்கப்பூர் போன்ற பெரிய நகரங்களுக்குப் புலம் பெயர்ந்து விட்டனர் [3]
பாஜம் நகரில் முன்பு மூன்று தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. இப்போது ஒரே ஒரு தமிழ்ப்பள்ளிதான் உள்ளது.[4]
இடம் | பள்ளியின் பெயர் |
மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|
பாஜம் | துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி[5][6] | 229 | 27 |