பாடாங் செராய் மக்களவைத் தொகுதி

பாடாங் செராய் (P017)
மலேசிய மக்களவைத் தொகுதி
கெடா
Padang Serai (P017)
Federal Constituency in Kedah
கெடா மாநிலத்தில் பாடாங் செராய் மக்களவைத் தொகுதி
மாவட்டம்கூலிம் மாவட்டம்; கெடா
வாக்காளர் தொகுதிபாடாங் செராய் தொகுதி
முக்கிய நகரங்கள்பாடாங் செராய்; கூலிம்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
நீக்கப்பட்ட காலம்1974
கட்சிபெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அசுமான் நசுருதீன்
(Azman Nasrudin)
வாக்காளர்கள் எண்ணிக்கை133,867
தொகுதி பரப்பளவு343 ச.கி.மீ
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் பாலிங் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (62.9%)
  சீனர் (17.7%)
  இதர இனத்தவர் (0.3%)

பாடாங் செராய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Padang Serai; ஆங்கிலம்: Padang Serai Federal Constituency; சீனம்: 巴东士乃联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தில் (Kulim District) உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P017) ஆகும்.

பாடாங் செராய் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாலிங் தொகுதி 43 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[1]

பொது

[தொகு]

நாடாளுமன்றத்தில் தமிழர்கள்

[தொகு]

பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியை 2008-ஆம் ஆண்டில் இருந்து, 13 ஆண்டுகளாகத் தமிழர்கள் தக்க வைத்துக் கொண்டனர். இந்தத் தொகுதியில் மலாய்க்காரர்களும், சீனர்களும் அதிகமான வாக்காளர்களாக இருந்தாலும் மூன்று முறை தமிழர்களைத் தேர்ந்து எடுத்து மலேசிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார்கள். (விவரங்கள் கீழே உள்ளன)

இருப்பினும் கடந்த 15-ஆவது மலேசியப் பொதுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது வேட்பாளர் கருப்பையா முத்துசாமி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.[2] அவருக்குப் பதிலாக முகமது சோபி ரசாக் (Mohamad Sofee Razak) என்பவர் வேட்பாளராக நிறுத்தப் பட்டார்.

பாடாங் செராய் நகரம்

[தொகு]

பாடாங் செராய் நகரம் (Padang Serai) மலேசியா, கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். பாடாங் செராய் நகரம் கோலா கெட்டில்; லூனாஸ் நகரங்களுக்கு இடையில் அமைந்து உள்ளது.

இந்த நகரைச் சுற்றிலும் பல செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. அந்த வகையில் அதிகமான தமிழர்களும் பாடாங் செராய் சுற்றுப் பகுதிகளில் வாழ்கிறார்கள். 2018-ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவின்படி மலாய்க்காரர்கள் 59.05 விழுக்காடு; இந்தியர்கள் 20.74 விழுக்காடு; சீனர்கள் 19.8 விழுக்காடு.[3] சீனர்களைக் காட்டிலும் தமிழர்கள் சற்று அதிகமாக இருந்தனர்.

பாடாங் செராய் தமிழர்கள்

[தொகு]

1890-ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாடாங் செராய்; கூலிம்; லூனாஸ் பகுதிகளில் இருந்த காபி, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப் பட்டார்கள். அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று அழைத்தார்கள்.

அந்தக் காலக்கட்டத்தில் பாடாங் செராய் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. 1990-ஆம் ஆண்டுகளில் பாடாங் செராய்; கூலிம் வட்டாரங்களில் தொழில்துறை மேம்பாடுகள் காணப்பட்டன.

அவற்றின் காரணமாக பல ரப்பர் தோட்டங்கள் மூடப்பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்களில் பெரும்பாலோர் பாடாங் செராய் புறநகர்ப் பகுதிகளில் குடியேறினார்கள். மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் இடங்களில் பாடாங் செராய் நகரமும் ஒன்றாகும்.

பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி

[தொகு]
பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பாடாங் செராய் தொகுதி கூலிம் உத்தாரா தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டு,
பாடாங் செராய் தொகுதி என மறுபெயரிடப்பட்டது
4-ஆவது 1974–1978 லிம் கியாம் ஊன்
(Lim Kiam Hoon)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
5-ஆவது 1978–1982
6-ஆவது 1982–1986 டான் கோக் ஊய்
(Tan Kok Hooi)
7-ஆவது 1986–1990 செவ் காம் கொய்
(Chew Kam Hoy)
8-ஆவது 1990–1995 லிம் லே ஊன்
(Lim Lay Hoon)
9-ஆவது 1995–1999
10-ஆவது 1999–2004 லிம் பீ காவ்
(Lim Bee Kau)
11-ஆவது 2004–2008
12-ஆவது 2008–2011 கோபாலகிருஷ்ணன் நாகப்பன்
(Gobalakrishnan Nagapan)
மக்கள் நீதிக் கட்சி (பிகேஆர்)
2011–2013 சுயேட்சை
13-ஆவது 2013–2018 நா. சுரேந்திரன்
(N. Surendran)
மக்கள் நீதிக் கட்சி (பிகேஆர்)
14-ஆவது 2018–2022 கருப்பையா முத்துசாமி
(Karupaiya Mutusami)
பாக்காத்தான் ஹரப்பான் (பிகேஆர்)
15-ஆவது 2022–தற்போது அசுமான் நசுருதீன்
(Azman Nasrudin)
பெரிக்காத்தான் (பெர்சத்து)

பாடாங் செராய் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள் 133,867 -
வாக்களித்தவர்கள் 92,302 68.95%
செல்லுபடி வாக்குகள் 91,416 100.00%
செல்லாத வாக்குகள் 896 -
பெரும்பான்மை 16,260 17.79%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான் நேசனல்

பாடாங் செராய் வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள் (%)
அசுமான் நசுருதீன்
(Azman Nasrudin)
பெரிக்காத்தான் 51,637 56.49%
முகமது சோபி ரசாக்
(Mohamad Sofee Razak)
பாக்காத்தான் 35,377 38.70%
சி. சிவராஜ்
(Sivarraajh Chandran)
பாரிசான் 2,983 3.26%
ஸ்ரீ நந்தா ராவ்
(Sreanandha Rao)
சுயேச்சை 846 0.93%
அம்சா அப்துல் ரகுமான்
(Hamzah Abdul Rahman)
உள்நாட்டு போராளிகள் கட்சி 424 0.46%
முகமது பக்ரி அசிம்
(Mohd Bakri Hashim)
சபா பாரம்பரிய கட்சி 149 0.16%

பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியின் தமிழர்கள்

[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் 2008-ஆம் ஆண்டில் இருந்து 2021-ஆம் ஆண்டு வரையில் பாடாங் செராய் தொகுதியைப் பிரதிநிதித்த தமிழர்கள்:

பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
12-ஆவது மக்களவை 2008 – 2011 கோபாலகிருஷ்ணன் நாகப்பன் பி.கே.ஆர்.
2011–2013 சுயேச்சை
13-ஆவது மக்களவை 2013 – 2018 நா. சுரேந்திரன் பி.கே.ஆர்.
14-ஆவது மக்களவை 2018 – 16.11.2022 கருப்பையா முத்துசாமி பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்.)

மேற்கோள்கள்

[தொகு]
  • "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
  • "15th General Elaction Malaysia".
  1. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "Portal Rasmi Parlimen Malaysia - Profile Ahli Dewan".
  3. "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-06-20.

மேலும் காண்க

[தொகு]

வார்ப்புரு:கெடா மக்களவைத் தொகுதிகள்