பாடாங் பெசார் (P001) மலேசிய மக்களவைத் தொகுதி பெர்லிஸ் | |
---|---|
Padang Besar (P001) Federal Constituency in Perlis | |
பாடாங் பெசார் மக்களவைத் தொகுதி (P001 Padang Besar) | |
வட்டாரம் | பெர்லிஸ் |
முக்கிய நகரங்கள் | பாடாங் பெசார் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | ருசுதான் ருசுமி (Rushdan Rusmi) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 60,192 |
தொகுதி பரப்பளவு | 450 ச.கி.மீ. |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பாடாங் பெசார் (மலாய்: Padang Besar; ஆங்கிலம்: Padang Besar; சீனம்: 巴东勿刹; என்பது மலேசியா. பெர்லிஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P001) ஆகும்.
இந்தத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முன்பு இந்தத் தொகுதி கங்கார் (மக்களவைத் தொகுதி)யின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தத் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு ஒரு புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது
1995-ஆம் ஆண்டு முதல் மலேசிய மக்களவையில் (Dewan Rakyat) இந்தத் தொகுதி பிரதிநிதிக்கப் படுகிறது.
2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2022 Malaysian General Election) இந்தத் தொகுதியில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் மலேசிய இஸ்லாமிய கட்சியின் சார்பில் ருசுதான் ருசுமி (Rushdan Rusmi) என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்தத் தொகுதியின் பரப்பளவு 450 சதுர கி.மீ. 2022-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 60,192 வாக்காளர்கள் உள்ளனர்.[2]
2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர், மலேசியா விடுதலை பெற்ற 1957-ஆம் ஆண்டில் இருந்து, கடந்த 14 பொதுத் தேர்தல்களிலும் இந்தத் தொகுதி பாரிசான் கூட்டணியின் கோட்டையாக விளங்கி வந்தது.
பாடாங் பெசார் நகரம் பெர்லிஸ் மாநிலத்தில் மலேசியா-தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ளது. இதுவே மலேசியாவின் ஆக வடக்கே உள்ள நகரம். இதனை மலேசிய நாட்டின் நுழைவாயில் நகரம் என்றும் அழைப்பது உண்டு.
கங்கார் நகரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும்; தாய்லாந்து அட் யாய் நகரத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள உள்ளூர்வாசிகள் பாடாங் பெசார் நகரத்தை பெக்கான் சியாம் அல்லது சயாம் நகரம் என்றும் அழைக்கிறார்கள்.[3]
இரு நாடுகளின் எல்லை சோதனைச் சாவடிகளுக்கு இடையில் இந்த நகரம் அமைந்து இருப்பதால், இந்த நகரத்தை கடைவலச் சொர்க்கம் என்றும் அடைமொழி பெற்று உள்ளது. மலேசியர்களின் பிரபலமான இடமாக விளங்கும் இந்த நகரம் ஒவ்வொரு வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.[4]
பாடாங் பெசார் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1994-ஆம் ஆண்டில் பாடாங் பெசார் தொகுதி உருவாக்கப்பட்டது | |||
9-ஆவது மக்களவை | 1995–1999 | அசுமி காலித் (Azmi Khalid) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | ||
11-ஆவது மக்களவை | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | சகிடி சைனுல் அபிதின் (Zahidi Zainul Abidin) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | ருசுதான் ருசுமி (Rushdan Rusmi) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
பெரிக்காத்தான் நேசனல் | ருசுடான் ருசுமி (Rushdan Rusmi) |
24,267 | 53.58% | + 53.58% | |
பாரிசான் நேசனல் | சகிடா சரிக் கான் (Zahida Zarik Khan) |
11,753 | 25.95% | - 19.23% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | முகமது யகாயா (Mohamad Yahaya) |
7,085 | 15.64% | - 21.60% ▼ | |
சுயேச்சை | சகிடி சைனுல் அபிடின் (Zahidi Zainul Abidin) |
1,939 | 1.56% | + 1.56% | |
சபா பாரம்பரிய கட்சி | கோ சூ லியாங் (Ko Chu Liang) |
244 | 0.54% | + 0.54% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 45,288 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 693 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 78 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 46,059 | 76.52% | - 4.68% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 60,192 | ||||
பெரும்பான்மை (Majority) | 12,514 | 27.63% | + 23.69% | ||
பெரிக்காத்தான் நேசனல் | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[5] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)