![]() பாடாங் ரெங்காஸ் தொடருந்து நிலையம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 4°46′N 100°51′E / 4.767°N 100.850°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கோலாகங்சார் மாவட்டம் |
தோற்றம் | 1900 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 33700[1] |
மலேசிய தொலைபேசி எண் | 05 |
பாடாங் ரெங்காஸ் (ஆங்கிலம்: Padang Rengas; மலாய்: Padang Rengas; சீனம்: 巴东仁加斯) என்பது மலேசியா பேராக் மாநிலத்தில் கோலாகங்சார் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும்.[2]
பாடாங் ரெங்காஸ் ஒரு பெரிய பைஞ்சுதை உற்பத்தி வளாகத்தைக் கொண்டுள்ளது; மற்றும் ரப்பர் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் கோலாகங்சார் ஆகும்.
இங்கு ஒரு மலைச் சுற்றுலா வளாகம் உள்ளது. அதன் பெயர் குனோங் பொண்டோக் சுற்றுலா வளாகம். இந்த மலைக்கு அருகில் சுண்ணாம்புக் கற்கள் தோண்டி எடுக்கப் படுகின்றன.
ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் செழிப்பாக வளர்ந்திருந்த ரெங்காஸ் மரங்களின் பெயரில் இருந்து பாடாங் ரெங்காஸ் என்ற பெயர் பெறப்பட்டதாகக் அறியப்படுகிறது.
பாடாங் ரெங்காஸ் நகரம்; கோலாகங்சார் - தைப்பிங் நகரங்களுக்கு இடையிலான ஒரு முக்கியமான துணை நகரமாக விளங்கி வருகிறது. இந்த நகருக்கு அருகில் புக்கிட் பெராபிட் ராபிட் (Bukit Rabit) எனும் இடத்தில் 1897-ஆம் ஆண்டில் ஒரு தொடருந்துச் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டது.[3]
தற்போது வரை, பாடாங் ரெங்காஸ் மற்றும் குனோங் பொண்டோக் ஆகியவை மிகவும் முக்கியமான நிலத் தடங்களாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவை கோலாகங்சார் மற்றும் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் ஆகியவற்றின் இடையிலான எல்லைகளாக அமைகின்றன.[3]