பாடியநல்லூர் | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 13°11′56″N 80°10′35″E / 13.1989°N 80.1765°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | திருவள்ளூர் மாவட்டம் |
ஏற்றம் | 69 m (226 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600 052 |
அருகிலுள்ள ஊர்கள் | செங்குன்றம், காரனோடை ஊராட்சி, புழல், அலமாதி |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப. |
இணையதளம் | https://chennaicorporation.gov.in |
பாடியநல்லூர் (Padianallur) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இப்பகுதி செங்குன்றம் புறநகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 69 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாடியநல்லூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13°11′56″N 80°10′35″E / 13.1989°N 80.1765°E ஆகும். செங்குன்றம், காரனோடை ஊராட்சி, புழல், அலமாதி ஆகியவை பாடியநல்லூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும். பாடியநல்லூர் பகுதியில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஒன்றும் அமையப் பெற்றுள்ளது.[1]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,863 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாடியநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. படையநல்லூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பாடியநல்லூர் திருநீற்றீசுவரர் கோயில் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயில்,[3][4] செல்வ விநாயகர் கோயில்[5] மற்றும் மொண்டிமாரியம்மன் கோயில்[6] ஆகியவை பாடியநல்லூர் பகுதியில் அமைந்துள்ளன.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)