பாட் பட்டு அல்லது வெள்ளை பேட் பட்டு, அசாமின் மல்பெரி பட்டு (ஆங்கிலம்: Pat silk; அசாமிய் மொழி: পাট েচম) என்பது இந்தியாவின் அசாமில் உள்ள உள்நாட்டு பட்டு வகையாகும்.[1] இது பொதுவாக ஒளிர் வெள்ளை அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் துணியினை நிழலில் உலர்த்த வேண்டும். பாட் பட்டுப்புழுவின் விருப்பமான உணவாக நுனி (வெள்ளை மல்பெரி செடி: மோரஸ் ஆல்பா) இலைகள் உள்ளது. பட்டு இழை இயற்கையான வெள்ளை நிறத்தைக் கொண்டுள்ளது. இதன் ஆயுள் மற்றும் பளபளப்பான அமைப்புக்காக அறியப்படுகிறது. பேட் பட்டு, மற்ற அசாம் பட்டுகளைப் போலவே, மேகேலா, சடோர் மற்றும் பிற ஜவுளி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தின் விளைவாக, உள்நாட்டுப் பட்டு அந்துப்பூச்சிகள் இனப்பெருக்கத்திற்காக மனிதர்களை நெருக்கமாகச் சார்ந்துள்ளது. காட்டுப் பட்டு அந்துப்பூச்சிகள் தங்கள் கொல்லைப்படுத்தப்பட்ட உறவினர்களிடமிருந்து வேறுபட்டவை (தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் செய்யப்படவில்லை); பட்டு உற்பத்தியில் இவை வணிக ரீதியாகச் சாத்தியமானவை அல்ல.
இந்தியாவில், கருநாடகம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவை மல்பெரி பட்டு உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும். இவை நாட்டின் மொத்த மல்பெரி மூல பட்டு உற்பத்தியில் 92% ஆகும்.[2] நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 14,000 மெட்ரிக் டன் பட்டு உற்பத்தியில் கருநாடகாவில் 9,000 மெட்ரிக் டன் மல்பெரி பட்டு உற்பத்தி செய்கிறது. இதனால் நாட்டின் மொத்த மல்பெரி பட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 70% பங்களிக்கிறது. கர்நாடகாவில் மைசூர் மாவட்டத்தில் பட்டு அதிகளவில் விளைகிறது. கர்நாடகாவில் மல்பெரி பட்டு உற்பத்தியானது மைசூர் பட்டு என்றும், பாட் பட்டு அசாமில் மல்பெரி பட்டு ஆகும்.
அசாமில் பட்டு வளர்ப்பு என்பது திபெட்டோ-பர்மன் கச்சாரி பழங்குடியினரால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு பழங்காலத் தொழிலாகும்.