வகை | பொதுத்துறை வங்கி |
---|---|
நிலை | 2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்கப்பட்டது. |
நிறுவுகை | பாட்டியாலா, 1917 |
தலைமையகம் | தி மால், பாட்டியாலா 147 002 இந்தியா |
முதன்மை நபர்கள் | அருந்ததி பட்டாச்சார்யா (தலைவர்), எஸ். ஏ. ரமேஷ் ரங்கன் (மேலாண்மை இயக்குநர்) |
தொழில்துறை | வங்கியியல் ஆயுள் காப்பீடு முதலீட்டுச் சந்தை மற்றும் தொடர்புடைய தொழில்கள் |
உற்பத்திகள் | கடன்கள், சேமிப்புகள், முதலீட்டு முறைகள், மற்றும் பல. |
நிகர வருமானம் | ▲ Rs. 730.24 கோடி (மார்ச் 2013) |
இணையத்தளம் | www |
பாட்டியாலா ஸ்டேட் வங்கி அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா என்பது இந்தியாவில் செயல்பட்டுவரும் 27 பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். 1917இல் பாட்டியாலாவில் தொடங்கப்பட்ட இவ்வங்கியானது பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளில் ஒன்றாகும். தற்போது இவ்வங்கி, 1035 சேவை மையங்கள் மற்றும் 1236 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மிக முக்கியமான அனைத்து நகரங்களிலும் செயல்பட்டு வந்தாலும் இதன் பெரும்பாலான கிளைகள் பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலேயே அமைந்துள்ளன.
1917 நவம்பர் 17 அன்று பாட்டியாலாவின் அப்போதைய மன்னரான பூபிந்தர் சிங்கால் தொடங்கப்பட்டது. இவ்வங்கி வேளாண்மை மற்றும் தொழிற்துறைகளின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டதாகும்.
2016 ஆம் ஆண்டில், பாட்டியாலா ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளான பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர், மைசூர் ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டது, இதற்கு இந்திய அரசு 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இறுதியாக 2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன.[1]