சுகாதாரம், மருத்துவக் கல்வி பீகார் அரசு | |
---|---|
அமைவிடம் | அசோக் ராஜ்பாத், பாட்னா, பீகார், இந்தியா |
ஆள்கூறுகள் | 25°36′28.77″N 85°10′03.06″E / 25.6079917°N 85.1675167°E |
மருத்துவப்பணி | பொது |
வகை | பொது, கல்வி |
இணைப்புப் பல்கலைக்கழகம் | பாட்னா பல்கலைக்கழகம் |
அவசரப் பிரிவு | ஆம் |
நிறுவல் | 1960 |
வலைத்தளம் | Official பாட்னா பல் மருத்துவக் கல்லூரி |
பட்டியல்கள் | Hospitals in India |
வேறு இணைப்புகள் | https://en.wikipedia.org/wiki/Patna_Dental_College |
பாட்னா பல் மருத்துவக் கல்லூரி (Patna Dental College) பல் மருத்துவத்திற்கான ஒரு நிறுவனம் ஆகும். இது இந்தியாவில் பீகார் மாநிலத்தில், பாட்னா நகரில், பாட்னா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனமாகும்.[1]
பாட்னா பல் மருத்துவக் கல்லூரி பீகார் அரசால், மருத்துவர் ஆர். பி. லால் முயற்சியால், செப்டம்பர் 9, 1960 அன்று, பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டது.
தற்போது இந்தக் கல்லூரி, பாட்னா நகரின் மையப்பகுதியில், அசோக் ராஜ்பாத்தில் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகில், கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.