பாட்ரிசியா முகிம் | |
---|---|
பிறப்பு | சில்லாங், மேகாலயா, இந்தியா |
பணி | எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் |
அறியப்படுவது | சமூக செயல்பாடு, எழுத்துக்கள் |
விருதுகள் | பத்மசிறீ சிறந்த பெண் ஊடகவியலாளர்களுக்கான சமேலி தேவி செயின் விருது ஒன் இந்தியா விருது இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு புலோ விருது மனிதநேயத்தின் உபேந்திர நாத் பிரம்ம சிப்பாய் விருது சிவ பிரசாத் பரூவா தேசிய விருது வடகிழக்கு பகுதியின் மேன்மை விருது |
பாட்ரிசியா முகிம் (Patricia Mukhim) இந்திய நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் சில்லாங் டைம்சு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆவார். [1] சமூக செயல்பாட்டிற்கு பெயர் பெற்றவர் ஆவார். [2] சமேலி தேவி செயின் விருது, [3] ஒன் இந்தியா விருது, [4] இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு புலோ விருது, மனிதநேயத்தின் உபேந்திர நாத் பிரம்ம சிப்பாய் விருது, [5] சிவ பிரசாத் பரூவா தேசிய விருது மற்றும் வடகிழக்கு பகுதியின் மேன்மை விருது போன்ற கௌரவங்களைப் பெற்றவர் ஆவார். [6] 2000 ஆம் ஆண்டில், நான்காவது உயரிய இந்திய சிவிலியன் விருதான பத்மசிறீயுடன் இந்திய அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டார். [7]
பாட்ரிசியா முகிம் வடகிழக்கு இந்திய மாநிலமான மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் பிறந்தார். இவள் இளமையாக இருந்தபோது இவளுடைய பெற்றோர் விவாகரத்து செய்ததாலும், அவளுடைய ஒற்றைத் தாயால் வளர்க்கப்பட்டதாலும் கடினமான குழந்தைப் பருவத்தைக் கொண்டிருந்தாள்.[8] [9] தனது பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை சில்லாங்கில் முடித்தார். இளங்கலை மற்றும் இளங்கல்வியியல் பட்டப்படிப்பை முடித்தார். [10] இவர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் 1987 ஆம் ஆண்டு ஒரு கட்டுரையாளராக பத்திரிகைத் துறைக்குத் திரும்பினார். மேலும் 2008 ஆம் ஆண்டு முதல், ஆங்கில மொழி நாளிதழான சில்லாங் டைம்சின் ஆசிரியராக உள்ளார். [11] [12] தி ச்டேட்சுமேன், தி டெலிகிராப், [13] [14] [15] ஈசுடர்ன் பனோரமா மற்றும் வடகிழக்கு டைம்சு போன்ற பிற வெளியீடுகளுக்கும் இவர் கட்டுரைகளை வழங்குகிறார்.[16] [17]
மேகாலயாவில் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில்லாங், வீ கேர் என்ற அரசு சாரா அமைப்பின் நிறுவனர் பாட்ரிசியா முகிம் ஆவார். [18] [19] இவர் இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார். [20] மேலும் இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தின் கீழ், மத நல்லிணக்கத்திற்கான தேசிய அறக்கட்டளையின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.[21] [22] [23] இவர் இந்திய மக்கள் தொடர்பியல் கழகத்தின் ஆளுநர்களின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
முகிம் மேகாலயா, கிழக்கு காசி மலை மாவட்டம், முன்னாள் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தில் உறுப்பினராக இருந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார்.
முகிம் மேகாலயாவின் சமூக-அரசியல் சூழலைப் பற்றிய பல கட்டுரைகளை எழுதியவர் ஆவார். 21 ஆம் நூற்றாண்டில் காசி தாய்வழி சமூகம் - சவால்கள் என்ற தலைப்பில் கெய்ட் காட்னர்-அபென்ட்ரோத் என்பவரால் திருமணத்தைப் பற்றிய ஒரு அத்தியாயத்தை இவர் அளித்துள்ளார். மேலும் வென் கென்சு கரோ என்ற புத்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். [24]
இந்தியாவின் வடகிழக்கில் பாலினம் - சம உலகத்திற்கான காத்திருத்தல் என்ற] புத்தகத்தை எழுதியவர் ஆவார். சப்பான், தாய்லாந்து, கவாய், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா போன்ற இடங்களில் நடந்த பல மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டார். இவர் பல தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்.
பாட்ரிசியா முகிம் விவாகரத்து பெற்றவர் ஆவார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவருடைய இரண்டு குழந்தைகள் முன்பே இறந்துவிட்டனர். [25]
பட்ரிசியா முகிம் 1996 ஆம் ஆண்டு புது தில்லி மீடியா பவுண்டேசனிடமிருந்து சமேலி தேவி செயின் விருதைப் பெற்றார். [26] [27] [28] இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு 2008 ஆம் ஆண்டு பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு புலோ விருதை வழங்கியது. சில மாதங்களுக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டு, இவர் மனிதநேயத்தின் உபேந்திர நாத் பிரம்ம வீரர் விருதைப் பெற்றார். [29] 2009 ஆம் ஆண்டு, சிவ பிரசாத் பரூவா தேசிய விருதைப் பெற்றார். ஒரு வருடம் கழித்து, இந்திய அரசு பத்மசிறீ விருதுக்கான குடியரசு தின மரியாதை பட்டியலில் இவர் பெயரை சேர்த்தது. [30] [31] 2011 ஆம் ஆண்டு, இவர் வடகிழக்கு சிறப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு ஒன் இந்தியா விருதைப் பெற்றார். [32] 1995 ஆம் ஆண்டில், சிறந்த பெண் ஊடகவியலாளர்களுக்கான சமேலி தேவி செயின் விருது இவருக்கு வழங்கப்பட்டது. [33]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)[https://web.archive.org/web/20150101030643/http://in.boell.org/sites/default/files/downloads/PROFILE_OF_SPEAKERS.pdf பரணிடப்பட்டது 2015-01-01 at the வந்தவழி இயந்திரம் "Control Arms Foundation of India" (PDF). Control Arms Foundation of India. 2014. Retrieved 30 December 2014.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)[https://web.archive.org/web/20150101025858/http://journalismmentor.in/mentors/ பரணிடப்பட்டது 2015-01-01 at the வந்தவழி இயந்திரம் "Journalism Mentor" Journalism Mentor. 2014. Retrieved 31 December 2014.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)"Journalism Mentor" பரணிடப்பட்டது 2015-01-01 at the வந்தவழி இயந்திரம். Journalism Mentor. 2014. Retrieved 31 December 2014.