பாட்ஷா Baashha | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
தயாரிப்பு | இராம. வீரப்பன் (வெளியீட்டாளர்) வி. இராஜம்மாள் வி. தமிழழகன் |
திரைக்கதை | சுரேஷ் கிருஷ்ணா |
Dialogue by | பாலகுமாரன் |
இசை | தேவா |
நடிப்பு | இரசினிகாந்து நக்மா ரகுவரன் |
ஒளிப்பதிவு | பி. எஸ். பிரகாஷ் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | சத்யா மூவிசு |
வெளியீடு | சனவரி 12, 1995 |
ஓட்டம் | 144 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாட்ஷா (Baashha) என்பது 1995 இல் சுரேஷ் கிருஷ்ணாவின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கொள்ளையர்கள் பற்றிய அதிரடி தொடர்பான இத்திரைப்படத்தில் இரசினிகாந்து, நக்மா, ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர். சனகராஜ், தேவன், சசி குமார், விஜயகுமார், ஆனந்தராஜ், சரண்ராஜ், கிட்டி, சத்தியப்பிரியா, செண்பகா, யுவராணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் கதை ஆட்டோ ரிக்சா ஓட்டுநரைச் சுற்றி வருகிறது. அவர் அவருடைய குடும்பத்தின் ஓர் இருண்ட கால வாழ்க்கையை மறைத்து, வன்முறையைற்ற, ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்வதைக் குறிப்பிடுகிறது.
1992 இல் அண்ணாமலை திரைப்படத் தயாரிப்பின் போது, இரஜினிகாந்தும், சுரேஷ் கிருஷ்ணாவும் 1991 இல் வெளியிடப்பட்ட ஹம் என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியைப் பற்றி விவாதித்தனர். அந்தக் காட்சி ஹம் திரைப்படத்தில் படமாக்கப்படவில்லை. பாட்ஷாவின் கதையும், படத்தின் மையக் கதையும் அந்தக் காட்சியிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது. முதன்மைப் புகைப்படம் எடுக்கும் பணி 1994 ஆகத்து மாதம் தொடங்கப்பட்டது. திரைப்படப் பணிகள் ஐந்து மாதங்களுக்குள் நிறைவடைந்தது. பி. எஸ். பிரகாஷ் ஒளிப்பதிவும், கணேஷ் குமார் படத்தொகுப்பும் செய்துள்ளனர். பாலகுமாரன் வசனங்களை எழுதியுள்ளார். பாடல்கள் தேவா, வைரமுத்து கூட்டணியில் உருவானது.
பாட்ஷா திரைப்படம் 1995 சனவரி 12 அன்று வெளியிடப்பட்டது. ரஜினிகாந்தின் வாழ்க்கையில், மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாகவும், கிட்டத்தட்ட 15 மாதங்கள் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படமாகவும் மாறியது. 'பாட்ஷா'வின் இந்தி-மொழிமாற்றுப் பதிப்பு, எண்ணிம முறையில் மீட்டெடுக்கப்பட்ட பிறகு 2012 மே 25 அன்று வெளியிடப்பட்டது. எண்ணிம முறையில் மீட்டெடுக்கப்பட்ட தமிழ்ப் பதிப்பு 2017 மார்ச் 3 அன்று வெளியிடப்பட்டது.
பாட்ஷா கன்னடத்தில் கோட்டிகோபா (2001), வங்காளத்தில் குரு, பங்களாதேசில் சுல்தான், மாணிக் பாட்ஷா என்ற பெயர்களில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "தங்கமகன் இன்று" | கே. ஜே. யேசுதாஸ், சித்ரா | 5:12 | |||||||
2. | "நான் ஆட்டக்காரன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:37 | |||||||
3. | "ஸ்டையில் ஸ்டையிலு தான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 5:27 | |||||||
4. | "அழகு அழகு நீ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 5:12 | |||||||
5. | "ரா.. ரா.. ராமையா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா | 6:33 | |||||||
6. | "பாட்ஷா பாரு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 1:18 | |||||||
7. | "நம்ம தோழன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 1:55 | |||||||
மொத்த நீளம்: |
31:17 |
சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - தமிழ்- ரஜினிகாந்த்