துவக்க கால பாண்டியர் நாணயங்கள் செப்புச் சதுரங்களாக இருந்தன; அச்சு வார்ப்புக்களாக இருந்தன. ஒருபக்கத்தில் ஐந்து தனிப்பட்ட படிமங்கள் பதிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் யானையின் படிமமும் அழகூட்டப்பட்ட மீனும் இருந்தன. இத்தகைய நாணயங்கள் அவர்களது தலைநகராக விளங்கிய கொற்கையிலும் வடக்கு இலங்கையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்செவ்வக நாணயங்களில் நந்தியும் சக்கரமும் இடம் பெற்றிருந்தன. இந்தச் ”சக்கரத்தில்” இரு கோடுகள் குறுகிய கோணத்தில் இருந்தன; முனை மேலாக இருந்தது. இரண்டு குறுக்குக் கோடுகள் கோணத்தின் பக்கவாட்டில் இடப்பட்டிருந்தன. அனைத்து கோடுகளும் சின்னத்தின் கடைசியில் இணைந்தன. இத்தகைய சின்னங்களை அனுராதபுரத்தில் கால்நடைகளை அடையாளப்படுத்தப் பட்டன. வெளி கோடுகள் ஓர் வளையமாக முடிந்துள்ள சின்னங்களை இலங்கையின் வடக்கு மாகாணங்களில் காணலாம். இந்த நாணயங்களில் காணப்படும் சின்னம் பாண்டியர்களது மீன் சின்னமாக இருந்தது.
7வது-10வது நூற்றாண்டில் பாண்டிய இராச்சியம் மீண்டெழுந்தபோது ஒன்று அல்லது இரண்டு மீன்கள் கொண்ட சின்னமும் பாண்டிய எருதும் முதன்மையாக இருந்தன. சில காலங்களில் "சோழர் நிற்கும் படிமமோ" அல்லது "சாளுக்கியர் பன்றி"யோ உடனிருந்தன. வெள்ளி, தங்க நாணயங்களில் சமசுகிருதத்திலும் பெரும்பாலான செப்பு நாணயங்களில் தமிழிலும் பதிக்கப்பட்டிருந்தன.[1][2] பாண்டியர் நாணயங்கள் துவக்க கால வடக்கு இலங்கையின் நாணயங்களுக்கு முன்னோடியாக இருந்தன. சங்க கால பாண்டியர் நாட்டு நாணயங்கள் கந்தரோடையிலும் அனுராதபுரத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.