![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெர்க்குரிக் அசானைடு குளோரைடு
| |
வேறு பெயர்கள்
மெர்க்குரிக் அமினோகுளோரைடு
மெர்க்குரி(II) அமைடு குளோரைடு மெர்க்குரி(II) அமிடோகுளோரைடு அமோனியாயேற்ற மெர்க்குரி | |
இனங்காட்டிகள் | |
10124-48-8 ![]() | |
ChemSpider | 21106343 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3032553 |
| |
UNII | JD546Z56F0 ![]() |
பண்புகள் | |
ClH2HgN | |
வாய்ப்பாட்டு எடை | 252.065 கி/மோல் |
அடர்த்தி | 5.56 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பாதரச அமிடோகுளோரைடு (Mercuric amidochloride) என்பது HgNH2Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மெர்க்குரிக் அமிடோகுளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. கோணல் மாணலான ஒற்றைப் பரிமாண பலபடி (HgNH2)n உடன் குளோரைடு எதிரயனிகளை இச்சேர்மம் கொண்டுள்ளது [1].அமோனியாவும் மெர்க்குரிக் குளோரைடும் சேர்ந்து வினைபுரிவதால் பாதரச அமிடோகுளோரைடு உருவாகிறது. இதனுடன் ஒரு காரத்தைச் சேர்க்கும்போது [Hg2N]OH(H2O)x. என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்ட மில்லன் காரம் உருவாகிறது. அமிடோ மற்றும் நைட்ரிடோ பொருள்களுடன் குளோரைடு, புரோமைடு, ஐதராக்சைடுகள் சேர்ந்த பல்வேறு பொருள்கள் அறியப்படுகின்றன
பாதரசத்தின் நச்சுத்தன்மை முன்னிலைப்படுத்தப்படுவதற்கு முன்னர் பாதரச அமிடோகுளோரைடு அம்மோனியாயேற்ற பாதரசம் என்று அறியப்பட்டது. கிருமி நீக்கியாகவும் நுண்ணுயிரி எதிர்ப்பியாகவும் இது பயன்படுத்தப்பட்டது [2]
.