பாத்திமா சுரய்யா பாஜியா | |
---|---|
பிறப்பு | ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா | 1 செப்டம்பர் 1930
இறப்பு | 10 பெப்ரவரி 2016 கராச்சி, பாக்கித்தான் | (அகவை 85)
கல்லறை | கிஸ்ரி கல்லறை |
தேசியம் | பாக்கித்தானியர் |
பணி | எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1960–2016 |
விருதுகள் | ஹிலால்-இ-இம்தியாஸ் (2013) |
பாத்திமா சுரய்யா பாஜியா ( Fatima Surayya Bajia ; 1 செப்டம்பர் 1930 - 10 பிப்ரவரி 2016) பாக்கித்தானைச் சேர்ந்த உருது புதின ஆசிரியரும், நாடக ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.[1] இவரது படைப்புகளைப் பாராட்டி ஜப்பானின் உயரிய குடிசார் விருது உட்பட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. பாஜியா பாக்கித்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் முதலமைச்சரின் ஆலோசகராக இருந்தார். மேலும் பாக்கித்தானின் கலை மன்றத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் 10 பிப்ரவரி 2016 அன்று கராச்சியில் 85 வயதில் இறந்தார். [1] [2][3]
சமூக நலன், இலக்கிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் மேடை ஆகியவற்றில் நன்கு அறியப்பட்ட ஆளுமையான பாஜியா இஸ்லாமாபாத் மற்றும் லாகூரில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நாடகங்களை எழுதினார். "மெஹ்மான்" என்ற தனது முதல் நீண்ட நாடகத்தையும் எழுதினார். ஆரைஷ்-இ-காம்-இ-ககல் என்ற தலைப்பில் ஆராக் மற்றும் அழகு பராமரிப்பு நிகழ்ச்சிகள் போன்ற இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் பங்களித்தார். மேலும் பல்வேறு குழந்தைகள் நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார். [3][1] தீவிர பெண்ணியவாதியாகவும் இருந்தார்.[4]
இந்தியாவின் ஐதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போதைய கர்நாடகா மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் நகரத்தில் "பஞ்ச் பீபி மலை" அருகே பிறந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். எந்த முறையான கல்வியையும் பெறவில்லை, அதற்கு பதிலாக வீட்டுக்கல்வியையேக் கற்றார். இருந்தபோதிலும், இவர் ஒரு சிறந்த அறிவாளியாகவும், வாசராகவும், எழுத்தாளராகவும் தரவரிசைப்படுத்தப்பட்டார்.[5][3]
தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாஜியா 10 பிப்ரவரி 2016 அன்று கராச்சியில் தனது 85 வயதில் இறந்தார்.[6][7]
1 செப்டம்பர் 2018 அன்று, இவரது 88வது பிறந்தநாளின் நினைவாக, கூகுள் இவரைக் கொண்டாடும் வகையில் கூகுள் டூடிலை வெளியிட்டது.[8]