பாத்திமா பின்த் முபாரக் அல் கெத்பி | |
---|---|
பிறப்பு | அண். 1943 அல்-ஹெயர், அல்-அயின், அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் |
துணைவர் | சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான் |
குழந்தைகளின் பெயர்கள் |
|
மரபு | நக்யான் குடும்பம் (திருமணம் மூலம்) |
தந்தை | முபாரக் அல் கெத்பி |
பாத்திமா பின்த் முபாரக் அல் கெத்பி ( Fatima bint Mubarak Al Ketbi ) ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனரும் முதல் தலைவருமான சேக் சயித் பின் சுல்தான் அல் நகியானின் மூன்றாவது மனைவியுமாவார். இவர் சேக்குகளின் தாய் என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தாய் என்றும் குறிப்பிடப்படுகிறார் [1]
பாத்திமா, அபுதாபியின் அல்-ஐனில் உள்ள அல்-ஹேயரில் தனது பெற்றோருக்கு ஒரே மகளாகப் பிறந்தார். [2] இவரது குடும்பம் பெடோயின் பழங்குடியினத்தைச் சார்ந்தது.
பாத்திமா ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண்கள் உரிமைகளை ஆதரிப்பவர். [2] இவர் குடும்ப மேம்பாட்டு அறக்கட்டளையின் [3] தலைவரும் ஆவார், மேலும் 1976 ஆம் ஆண்டு முதல் பெண்கள் அமைப்பான அபுதாபி பெண்களின் விழிப்புணர்வுக்கான சங்கத்தின் அடித்தளத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.[2] [2] பெண் கல்விக்காக நாடு தழுவிய பிரச்சாரத்தில் முக்கியப் பங்காற்றினார் 1975 இல் தான் நிறுவிய ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது பெண்கள் சங்கத்திற்கு தலைமை தாங்குகிறார் 1990 களின் இறுதியில், அமீரக கூட்டாட்சியின் தேசிய அமைப்பில் பெண்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று இவர் பகிரங்கமாக அறிவித்தார்.
வயது வந்தோருக்கான கல்வியறிவு மற்றும் பெண்களுக்கு இலவச பொதுக் கல்வி வழங்குதல் தொடர்பான முயற்சிகளையும் பாத்திமா ஆதரிக்கிறார். சிறந்த கல்வி செயல்திறன் மற்றும் பெண் பெறுநர்களின் சுற்றுச்சூழல் மற்றும் உலகக் குடியுரிமைக்கான அர்ப்பணிப்புக்காக 2005 ஆம் ஆண்டு முதல் "ஷேக்கா பாத்திமா விருது" என பெயரிடப்பட்ட விருது வழங்கப்படுகிறது. இந்த வெகுமதியானது மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு விரிவடைந்து 2010 இல் இந்தியாவிற்கு விரிவுபடுத்தப்பட்ட முழு கல்வி உதவித்தொகையை உள்ளடக்கியது. இவர் தொடர்ந்து விளையாட்டிலும் பெண்களுக்கு ஆதரவளித்துள்ளார் . பெண் விளையாட்டு வீரர்களுக்கான "ஷேக்கா பாத்திமா பிந்த் முபாரக் விருது" என்ற விருதைத் தொடங்கினார். ஷேக்கா பாத்திமா பிந்த் முபாரக் அபுதாபியில் 'பாத்திமா பிந்த் முபாரக் மகளிர் அகாதமி' என்ற மகளிர் விளையாட்டு அகாதமியையும் உருவாக்கினார். [4] பாக்கித்தானின் லாகூரில் உள்ள ஷேக்கா பாத்திமா செவிலியம் மற்றும் சுகாதார அறிவியல் நிறுவனம் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
30 மார்ச் 2021 அன்று, ஷேக்கா பாத்திமா பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தேசிய செயல் திட்டத்தை தொடங்கினார் - வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் தேசிய செயல் திட்டம் இதுவாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் தீர்மானம் 1325 ஐ ஊக்குவிப்பதன் மூலம் உலகளவில் பெண்களுக்கு அதிகாரம் மற்றும் ஆதரவை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. [5]
பாத்திமா, 1960 இல் கிழக்கு பிராந்தியத்தின் ஆட்சியாளராக இருந்தபோது சேக் சயித் பின் சுல்தான் அல் நகியானை மணந்தார்.[6] சேக் சயீத் இவரை ஒரு பள்ளிவாசலில் சந்தித்தார்.[7][8] ஆகஸ்ட் 1966 இல் ஷேக் சயீத் ஆட்சியமைத்தபோது இவர்கள் அபுதாபிக்கு குடிபெயர்ந்தனர்.[9][10] இவரது செல்வாக்கு மிக்க ஆளுமையின் காரணமாக தனது கணவனுக்கு மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் விருப்பமான மனைவியாக இருந்தார்.[9][10] இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான முகமது பின் சயீது அல் நகியானின் தாயார் ஆவார். மேலும் இவருக்கு சேக் அம்தான், சேக் ஹஸ்ஸா, சேக் தக்னூன், சேக் மன்சூர், சேக் அப்துல்லா, சேக்கா ஷம்மா மற்றும் சேக் அல்யாசியா ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.[9] அபுதாபியின் ஆளும் குடும்பமான அல் நகியான்களில் இவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக உள்ளனர். [11]