பானி ஜம்ரா (ஆங்கிலம்: Bani Jamra; அரபி: بني جمرة) பகுரைனின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமமாகும். தலைநகரம் மனாமாவிற்கு மேற்கிலும், புடையாவின் கடற்கரையோர கிராமத்திற்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. இது கிழக்கே புடையா மற்றும் தெற்கே டிரஸ். இது வடக்கு மாகாண நிர்வாகத்தின் கீழுள்ளது.
பகுரைனில் எண்ணெய் கண்டுபிடிப்பதற்கு முன்னர், பெரும்பாலான மக்கள் விவசாயத்தில், குறிப்பாக போிச்சம்பழம் பண்ணைகளில் ஈடுபட்டிருந்தனர். பானி ஜம்ரா பாரம்பரியமான துணி நெசவு மையத்திற்கு பிரபலமாக உள்ளது. பானி ஜாமிராவில் உள்ள அனைத்து மக்களும் கிட்டத்தட்ட பர்ர்னா ஷியாஸ். முன்னணி மதகுரு மற்றும் அரசியல் ஆர்வலர் அப்துல் அமீர் அல்-ஜம்ரி மற்றும் அவரது மகன் மன்சூர் அல்-ஜம்ரி ஆகியோர் இக் கிராமத்திலிருந்து வந்தவர்கள்.
ஜே. ஜி. லோரிமெரின் ”பாரசீக வளைகுடாவின் அரசிதழில்” (1908) இக்கிராமத்தில் 50 குடிசைகள் இருந்தன என்றும் அவற்றில் வேளாண் மற்றும் நெசவுத்தொழில் புரிந்த பகர்னாக்கள் வாழ்ந்ததாகவும் கிராமத்தில் 1500 பனைமரங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.[1]