பானிகால் கணவாய் | |
---|---|
ஏற்றம் | 2,832 மீ (9,291 அடி) |
அமைவிடம் | இந்தியா |
மலைத் தொடர் | பிர் பாஞ்சல், இமயமலை |
பானிகால் கணவாய் (Banihal Pass தேவநாகரி: बनिहाल दर्रा) பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது 2,832 மீட்டர் (9,291 அடி உயரம்) உயரத்தில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் காசுமீர் மாநிலத்திற்கும் காசுமீர் பள்ளத்தாக்கிற்கும் இடையே அமைந்துள்ளது.காசுமீரி மொழியில் பானிகால் என்பதற்கு பனிப்புயல் என்று பொருளாகும் [1].
குளிர்காலங்களில் இம்மலைத்தொடரானது பனிமூடி இருக்கும். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு பானிகால் கணவாய் வழியாகச் செல்லும் சாலை 1958 வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் ஜவகர் குகை வடிவமைக்கப்பட்டதும் இப்பாதையானது உபயோகத்தில் இல்லை.