பானுமதி தேவி | |
---|---|
பிறப்பு | [1] சிட்டவே, இராகினி, பிரித்தானிய பர்மா ( தற்போதைய மியான்மர் ) | 15 மே 1934
இறப்பு | 4 சனவரி 2013 புரி | (அகவை 78)
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட, நாடக நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1953–1987 |
பெற்றோர்(கள்) | சாரதி பட்நாயக் பட்டாதேவி |
வாழ்க்கைத் துணை | அரிகர பாண்டே |
பிள்ளைகள் | சுவர்ணலதா |
விருதுகள் | ஜெயதேவர் விருது |
பானுமதி தேவி ( Bhanumati Devi ) (15 மே 1934 - 4 சனவரி 2013) பர்மிய நாட்டில் பிறந்த இந்தியத் திரைப்பட மற்றும் நாடக நடிகை ஆவார் .
தேவி பிரித்தானிய பர்மாவில் 15 மே 1934-இல் பிறந்தார் [2] இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து தனது இந்திய குடும்பத்துடன் இந்தியாவின் ஒடிசாவிலுள்ள புரிக்கு குடிபெயர்ந்தார். [3] [4]
தேவி, 1942-இல் தனது ஏழு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். [4] லக்யே ஹிரா மற்றும் நபஹு ரதி நாமரு பதி' ஆகிய நாடகங்களில் இவர் சிறந்த மேடைப் பாத்திரங்களை பெற்றார். [4] தேவி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்டக்கிலுள்ள அன்னபூர்ணா நாடக நிறுவனத்தில் நடித்து வந்தார்.[5]
தனது பத்தொன்பது வயதில் 1954 ஆம் ஆண்டு அமரி கன் ஜியா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். குறிப்பாக 1950கள் மற்றும் 1960களில் ஒடிசா திரைப்படத்துறையில் தீவிரமாக இருந்தார். பத்துக்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களில் தேவி முக்கிய வேடத்தில் நடித்தார். [6] 1966-ஆம் ஆண்டு ஒடியா திரைப்படமான மாத்திரா மனிஷாவில் ஹராபௌ என்ற வேடத்திற்காக தேசிய திரைப்பட விருதை வென்றார் . [5] 1986ஆம் [5] ஆண்டு வெளியான ஜெய்தேவ் இவரது கடைசிப் படமாகும்.
தேவிக்கு 1985-இல் சங்கீத நாடக அகாதமி சங்கீத நாடக அகாதமி விருது வழங்கி கௌரவித்தது.[7] 2005-ஆம் ஆண்டில், ஒடிசா மாநில திரைப்பட விருதுகளில் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜெய்தேவ் விருதைப் பெற்றார்.
பானுமதி தேவி தனது 78வது வயதில் 4 சனவரி 2013 அன்று ஒடிசாவின் புரியிலுள்ள செஞ்சிலுவைச் சாலையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
Born May 15, 1934, in Burma, Bhanumati had returned Orissa