பான் பான் இராச்சியம்

பான் பான் இராச்சியம்
Pan Pan Kingdom
Kerajaan Pan Pan
300700
பான் பான் இராச்சியம்
பான் பான் இராச்சியம்
தலைநகரம்சையா தாய்லாந்து
பேசப்படும் மொழிகள்பல்லவ மொழி
சமயம்
இந்து
அரசாங்கம்முடியாட்சி
ராஜா 
வரலாறு 
• தொடக்கம்
300
• முடிவு
700
முந்தையது
பின்னையது
?
சிறீவிஜயம்
தற்போதைய பகுதிகள்மலேசியா

பான் பான் இராச்சியம் (மலாய்: Kerajaan Pan Pan அல்லது Panpan; ஆங்கிலம்: Pan Pan Kingdom) என்பது கி.பி. 3-ஆம்; 7-ஆம் நூற்றாண்டுகளில் தீபகற்ப மலேசியாவின் வட மேற்குப் பகுதியில் அமைந்து இருந்த ஓர் இந்து மத அரசு ஆகும்.

மலாயாவின் கிளாந்தான், திராங்கானு மாநிலங்களையும்;[1] தாய்லாந்தில் சூராட் தானி மாநிலம் (Surat Thani), நக்கோன் சி தாமராத் மாநிலம் (Nakhon Si Thammarat) எனும் இரு மாநிலங்களையும் பான் பான் அரசு (Pan Pan) ஆட்சி செய்து இருக்கிறது.[2]

வரலாறு

[தொகு]

பான் பான் அரசைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இருப்பினும் இந்த அரசை 775-ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஸ்ரீ விஜய அரசு தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து உள்ளது.[3]

பான் பான் அரசு தோன்றுவதற்கு முன்னதாகவே பேராக் மாநிலத்தின் புருவாஸ் பகுதியில் கங்கா நகரம் (Gangga Negara) எனும் இந்திய மய அரசு உருவாகி விட்டது. பான் பான் அரசின் தலைநகரம் சையா (Chaiya). இந்த நகரம் இன்னும் தாய்லாந்தில் இருக்கிறது.

கிரா குறுக்குநிலம் (Kra Isthmus); தாய்லாந்தையும் மலாயாவையும் பிரிக்கும் ஒரு குறுக்குநிலம். அங்குதான் கிழக்குக் கரைப் பக்கமாக இந்தச் சையா நகரம் இருக்கிறது. இந்த நகரம் தான் முன்பு காலத்தில் பான் பான் அரசின் தலைநகரமாகவும் விளங்கி இருக்கிறது.

கவுந்தய்யா II

[தொகு]

கி.பி. 424; கி.பி. 453-ஆம் ஆண்டுகளின் இடைவெளிக் காலத்தில் பான் பான் அரசு, சீனாவிற்குத் தூதுக் குழுக்களை அனுப்பி வைத்து இருக்கிறது. அப்போது பான் பான் அரசை கவுந்தய்யா II (Kaundinya II) எனும் அரசர் ஆட்சி செய்து இருக்கிறார்.[4]

இந்த அரசர் தான் பூனான் அரசின் இந்து மதத்தைப் பரப்புவதற்கு முயற்சிகள் செய்து இருக்கிறார். பூனான் அரசு என்பது கம்போடியாவைச் சார்ந்த ஒரு அசாகும்.

சையா அகழாய்வுகள்

[தொகு]

1920-ஆம் ஆண்டில் சையா நகரத்தில் அகழாய்வு செய்தார்கள். மண்ணுக்குள் பல மீட்டர்கள் ஆழத்தில் கட்டடச் சிதைவுகள்; கருங்கல் சிலைச் சிதைவுகள்; கரும்பாறைச் சிதைவுகள்; சிலை பீடங்கள்; கோயில் கருவறைத் தூண்கள் என்று நிறையவே பழம் பொருட்கள் கிடைத்தன.

அந்தச் சிதைவுகள் மூலமாகத் தான் பான் பான் என்கிற ஓர் அரசு இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்தன. அப்படித்தான் தமிழ்நாட்டில் இருந்து வணிகம் செய்ய வந்த வணிகத் தமிழர்கள் சார்ந்த ஓர் அரசு இருந்தது எனும் செய்தியும் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.

சிவபெருமான் சிலைகளின் சிதைவுகள்

[தொகு]

தாய்லாந்தில் இருக்கும் நாக்கோன் சி தாமராட் மாவட்டத்தில் சிச்சோன் (Sichon), தா சாலா (Tha Sala) எனும் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட தொல் பொருள் சிதைவு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

அதாவது பான் பான் காலத்துச் சிதைவுகள். பெரும்பாலானவை இந்து சமயம் சார்ந்த சரணாலயங்கள். இந்தச் சரணாலயங்களில் காணப்பட்ட சிலைகள் அனைத்துமே சிவபெருமான் சிலைகளின் சிதைவுகள் ஆகும்.[5]

கம்போடியாவில் பல்லவர் ஆட்சியை உருவாக்கிய கவுந்தியா

[தொகு]

கம்போடியா; பூனான், அன்னாம்; சாம்பா; வியட்நாம் பகுதிகளுக்குச் செல்லும் பாய்மரக் கப்பல்கள் கிளாந்தான் கரையோர பான் பான் அரசின் தலைநகரத்தில் தங்கிச் செல்வது வழக்கம்.

அப்போது பட்டாணி எனும் நகரம் தலைநகரமாக இருந்தது. தென்சீனக் கடலில் சரியான காற்று வீசும் வரை காத்து இருப்பார்கள். இடைப்பட்ட காலத்தில் வணிகமும் நடந்தது.

ஸ்ரீ விஜயப் பேரரசின் அரசர் தர்மசேது

[தொகு]

அந்த வகையில் கம்போடியாவில் பல்லவர் ஆட்சியை உருவாக்கிய கவுந்தியா (Kaundinya) என்பவர் இந்தப் பான் பான் அரசில் இருந்து போனவர். கம்போடியாவில் நாகி சோமா (Nagi Soma) எனும் இளவரசியாரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் மூலமாகக் கம்போஜம் என்கிற அரசையும் உருவாக்கினார்.[6]

775-ஆம் ஆண்டில், ஸ்ரீ விஜயப் பேரரசின் அரசராக இருந்த தர்மசேது (Dharmasetu) பான் பான் அரசின் மீது படை எடுத்தார். அதன் பின்னர் பான் பான் அரசு ஸ்ரீ விஜயத்தின் கீழ் வந்தது.[7]

மேலும் படிக்க

[தொகு]
  • Michel Jacq-Hergoualc'h (2002). "The Situation in the Malay Peninsula in the 10th and 11th Centuries" and "The Commercial Boom in the Malay Peninsula in the 12th and 13th Centuries". The Malay Peninsula: Crossroads of the Maritime Silk-Road (100 BC–1300 AD). Brill. pp. 339–442.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7591-0279-1.
  2. Joachim Schliesinger (2016). Origin of Man in Southeast Asia 3 Volume 3: Indianization and the Temples of the Mainland; Part 3 Pre-Modern Thailand, Laos and Burma. Booksmango. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1633237273.
  3. Lawrence Palmer Briggs (1950). "The Khmer Empire and the Malay Peninsula". The Journal of Asian Studies (Duke University Press) 9 (3): 256–305. doi:10.2307/2049556 இம் மூலத்தில் இருந்து 26 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.org/details/briggs1950. 
  4. Hall, D.G.E. (1981). A History of South-East Asia, Fourth Edition. Hong Kong: Macmillan Education Ltd. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-24163-0.
  5. "Vestiges of former Hindu sanctuaries, mostly Shivaite, built from the fifth to the seventh centuries". பார்க்கப்பட்ட நாள் 28 February 2022.
  6. Jacq-Hergoualc'h, Micheal (2002). The Malay Peninsula: Crossroads of the Maritime Silk-Road (100 Bc-1300 Ad) (in ஆங்கிலம்). BRILL. pp. 158–159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-11973-4.
  7. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. pp. 130–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-4155-67-5. பார்க்கப்பட்ட நாள் 28 February 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]