பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகம், முன்பு பீகார் பல்கலைக்கழகம், டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகம் (BRABU) என்று பிரபலமாக அறியப்பட்ட [1] இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் பீகாரில் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் அமைந்துள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகமாகும். 1960 இல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம் 38 தொகுதிக் கல்லூரிகளையும் 40 இணைப்புக் கல்லூரிகளையும் கொண்டுள்ளது. இது இளங்கலை முதல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிலை வரை நேரடிக் கல்வியையும், தொலைதூரக் கல்வியையும் வழங்குகிறது. இது சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் சிற்பியுமான பி.ஆர்.அம்பேத்கரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
பீகார் பல்கலைக்கழகம் 1952 இல் பீகார் பல்கலைக்கழகச் சட்டம், 1951 மூலம் நிறுவப்பட்டது. இச்சட்டம் பாட்னா பல்கலைக்கழகத்தைப் பிரித்து, பாட்னாவின் நகராட்சி எல்லைக்கு வெளியே அமைந்துள்ள அனைத்து கல்லூரிகளின் அதிகார வரம்பையும் புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு வழங்க வழிவகை செய்கிறது.
இப்பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பு திர்காத் கோட்டத்தின் ஆறு மாவட்டங்களில் பரவியுள்ளது. 2022[update] ஆண்டு நிலவரப்படி இப்பல்கலைக்கழகம் 38 தொகுதிக் கல்லூரிகளையும் மற்றும் 40 இணைப்புக் கல்லூரிகளையும் கொண்டுள்ளது.
இதன் தொகுதிக் கல்லூரிகளாவன:
- லங்கத் சிங் கல்லூரி
- மஹந்த் தர்ஷன் தாஸ் மகிளா கல்லூரி
- ஆர். டி. எஸ். கல்லூரி முசாபர்பூர்
- டாக்டர் ஆர். எம். எல். எஸ். கல்லூரி முசாபர்பூர்
- எம். பி. சின்ஹா அறிவியல் கல்லூரி முசாபர்பூர்
- ஆர். பி. பி. எம். கல்லூரி முசாபர்பூர்
- நிதீஷ்வர் சிங் கல்லூரி முசாபர்பூர்
- ராமேஸ்வர் சிங் கல்லூரி முசாபர்பூர்
- எல். என். டி. கல்லூரி முசாபர்பூர்
- எம். எஸ். கே. பி. கல்லூரி முசாபர்பூர்
- ஜிவச் கல்லூரி மோதிபூர் முசாபர்பூர்
- ஆர். சி. கல்லூரி முசாபர்பூர்
- எஸ். ஆர். பி. எஸ். கல்லூரி முசாபர்பூர்
- ஆர். என் கல்லூரி ஹாஜிபூர் வைஷாலி
- வைஷாலி மகிளா கல்லூரி ஹாஜிபூர் வைஷாலி
- ஜமுனி லால் கல்லூரி ஹாஜிபூர் வைஷாலி
- டி. சி. கல்லூரி ஹாஜிபூர் வைஷாலி
- எல். என். கல்லூரி வைஷாலி
- சம்தா கல்லூரி வைஷாலி
- பி. எம். டி கல்லூரி ஹாஜிபூர் வைஷாலி
- எஸ். ஆர். கே. ஜி. கல்லூரி சீதாமார்சி
- எஸ். எல். கே. கல்லூரி சீதாமார்சி
- ஆர். எஸ். எஸ். அறிவியல் கல்லூரி சீதாமார்சி
- ஆர். எஸ். எஸ். மகிளா கல்லூரி சீதாமார்சி
- ஜே. எஸ். கல்லூரி சீதாமர்ஹி
- எம். எஸ். கல்லூரி கிழக்கு சம்பாரண்
- டாக்டர் எஸ். கே. சின்ஹா மகளிர் கல்லூரி , கிழக்கு சம்பாரண்
- எஸ். என். எஸ். கல்லூரி ஹாஜிப்பூர்
- எல். என். டி. கல்லூரி கிழக்கு சம்பாரண்
- எம். எஸ். எஸ். ஜி. கல்லூரி கிழக்கு சம்பாரண்
- எஸ். ஆர். ஏ. பி. கல்லூரி கிழக்கு சம்பாரண்
- கே. சி. டி. சி கல்லூரி கிழக்கு சம்பாரண்
- எம். ஜே. கே கல்லூரி மேற்கு சம்பாரண்
- ராம் லக்கான் சிங் யாதவ் கல்லூரி பெட்டியா பெட்டியா மேற்கு சம்பாரண்
- டி. பி. வர்மா கல்லூரி மேற்கு சம்பாரண்
- சி. என். கல்லூரி சாஹிப்கஞ்ச் முசாபர்பூர்
- ஜே. பி. எஸ். டி. கல்லூரி பக்குச்சி
- ஆர். பி. எஸ். கல்லூரி சகியாஜ் வைஷாலி
- ↑ "Bihar University". brabu.net. Archived from the original on 23 July 2011. பார்க்கப்பட்ட நாள் 28 June 2011.