பாப்பார் (P175) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Papar (P175) Federal Constituency in Sabah | |
பாப்பார் மக்களவைத் தொகுதி (P175 Papar) | |
மாவட்டம் | பாப்பார் மாவட்டம் மேற்கு கரை பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 59,942 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பாப்பார் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பாப்பார் |
பரப்பளவு | 610 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | சபா மக்கள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | அர்மிசான் முகமது அலி (Armizan Mohd Ali) |
மக்கள் தொகை | 106,765 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பாப்பார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Papar; ஆங்கிலம்: Papar Federal Constituency; சீனம்: 吧巴联邦选区) என்பது மலேசியா, சபா, மேற்கு கரை பிரிவு, பாப்பார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P175) ஆகும்.[5]
பாப்பார் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து பாப்பார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
பாப்பார் மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். பாப்பார் மாவட்டத்தின் தலைநகரம் பாப்பார் நகரம். சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் பாப்பார் மாவட்டமும் ஒன்றாகும்.[7]
பாப்பார் நகரம் கோத்தா கினபாலுவிற்கு தெற்கே 38 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஓர் அமைதியான நகரம். இந்த நகரத்தில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது. சபா மாநில தொடருந்து சேவையின் (Sabah State Railway) முக்கிய நிறுத்தங்களில் ஒன்றாக அந்த நிலையம் விளங்குகிறது.
குரோக்கர் மலைத்தொடரை (Crocker Range) நோக்கி, தாழ்வான கடலோரப் பகுதிகளால் பாப்பார் நகரம், சூழப்பட்டு உள்ளது. இங்குள்ள தாழ்வு நிலப் பகுதிகள் நெல் சாகுபடிக்குப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நெல் சாகுபடியில் பெரும்பாலும் பழங்குடி மக்களே ஈடுபட்டு உள்ளனர். [8]
1877-ஆம் ஆண்டுகளில் சபாவில் உருவாக்கப்பட்ட நகரங்களில் பாப்பார் நகரமும் ஒன்றாகும். சபாவில் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக வரலாறு படைக்கின்றது. சபாவின் மேற்கு கரை பிரிவு, முதலில் புரூணை சுல்தானகத்தால் (Bruneian Sultanate) ஆளப்பட்டது. அதன் முதல் உள்ளூர் தலைவர் பஜாவ் (Bajau) வம்சாவளியைச் சேர்ந்த டத்து அமீர் பகார் (Datu Amir Bahar) என்பவர் ஆவார்.
1877-ஆம் ஆண்டில் புரூணை சுல்தானகத்தால் பரோன் வான் ஓவர்பெக் (Baron von Overbeck) மற்றும் டென்ட் சகோதரர்களிடம் (Dent Brothers) பாப்பார் நிலப்பகுதி ஒப்படைக்கப்பட்டது.
பாப்பார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பாப்பார் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P146 | 1986-1990 | ஒசு சுக்காம் (Osu Sukam) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990-1995 | |||
9-ஆவது மக்களவை | P153 | 1995-1999 | ||
10-ஆவது மக்களவை | 1999-2004 | |||
11-ஆவது மக்களவை | P175 | 2004-2008 | ரோசுனா அப்துல் ரசீத் சிர்லின் (Rosnah Abdul Rashid Shirlin) | |
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | அகமட் அசன் (Ahmad Hassan) |
வாரிசான் | |
15-ஆவது மக்களவை | 2022 | அர்மிசான் முகமது அலி (Armizan Mohd Ali) |
சபா மக்கள் கூட்டணி (பெர்சத்து) | |
2022–தற்போது வரையில் | சபா மக்கள் கூட்டணி (சுயேச்சை) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அர்மிசான் முகமது அலி (Armizan Mohd Ali) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 22,620 | 51.99 | 51.99 | |
அகமட் அசன் (Ahmad Hassan) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 10,396 | 23.89 | 24.65 ▼ | |
என்றி சிம் சீ ஆன் (Henry Shim Chee On) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 9,144 | 21.02 | 21.02 | |
நிக்கோலஸ் சில்வெஸ்டர் (Nicholas Sylvester @ Berry) | தாயக இயக்கம் (GTA) | 783 | 1.80 | 1.80 | |
ஜானி சிட்டாமின் (Johnny Sitamin) | சுயேச்சை (Independent) | 335 | 0.77 | 0.77 | |
நார்பர்ட் சின் சுவான் (Norbert Chin Chuan) | சுயேச்சை (Independent) | 231 | 0.53 | 0.53 | |
மொத்தம் | 43,509 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 43,509 | 98.23 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 786 | 1.77 | |||
மொத்த வாக்குகள் | 44,295 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 59,942 | 72.59 | 11.24 ▼ | ||
Majority | 12,224 | 28.1 | 27.19 | ||
சபா மக்கள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)