பாம்பெர்கெர் மூவசீன் தொகுப்புவினை ( Bamberger triazine synthesis) என்பது கரிம வேதியியலில் மூவசீனைத் தயாரிக்க உதவும் ஒரு மரபார்ந்த தொகுப்பு முறையாகக் கருதப்படுகிறது. யூகென் பாம்பெர்கெர் இத்தொகுப்பு வினையை 1892 ஆம் ஆண்டில் கண்டறிந்தார்[1].
தொடர்புடைய அனிலீன் , சோடியம் நைட்ரைட் மற்றும் ஐதரோ குளோரிக் அமிலம் மற்றும் பைரூவிக் அமிலத்தினுடைய ஐதரசோன் ஆகிய சேர்மங்கள் இவ்வினையின் வினைபடு பொருட்களாகும். இடைவினைப் பொருளாக உருவாகும் அரைல் ஈரசனோனியம் உப்பு மூன்றாவது படிநிலையில் அசிட்டிக் அமிலத்தில் கலந்த கந்தக அமிலத்துடன் சேர்ந்து பென்சோ மூவசீனாக மாற்றமடைகிறது.