பாம்பே குரோனிக்கிள்

Bombay Chronicle January 26, 1931

பாம்பே குரோனிக்கிள் என்பது மும்பையிலிருந்து சர் பெரோஸ் சா என்ற வழக்கறிஞரால் பதிக்கப்பட்டு வெளிவந்த ஆங்கிலச் செய்தித் தாள் ஆகும்.[1] இது 1910 முதல் 1959 வரை பதிப்பாகி வெளிவந்தது. ஜே பி பட்டேல் என்பவர் இதனைத் தொடங்குவதற்கு உதவியாக இருந்தார். 1913 முதல் 1919 வரை பி.ஜி. ஹோர்னிமன் என்பவர் இச்செய்தித் தாளை நடத்தி வந்தார்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன் இந்தியாவில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகள், போராட்டங்கள் ஆகியன பாம்பே குரோனிக்கிள் செய்தித்தாளில் இடம் பெற்றன. வரலாற்று ஆசிரியர்களின் நூல்களுக்குச் சான்றாவணங்களாக, இதில் அச்சானவை விளங்குகின்றன.

சான்று

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-01. பார்க்கப்பட்ட நாள் 2016-10-16.