பாயான் பாரு Bayan Baru | |
---|---|
ஆள்கூறுகள்: 5°19′32.757″N 100°17′8.0592″E / 5.32576583°N 100.285572000°E | |
நாடு | மலேசியா |
நகரம் | ஜார்ஜ் டவுன் |
நிறுவப்பட்டது | 1972[1][2] |
அரசு | |
• மன்றங்கள் | பினாங்கு தீவு மாநகராட்சி |
இணையதளம் | mbpp |
பாயான் பாரு (மலாய்: ஆங்கிலம்: Bayan Baru) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகரின் ஒரு புறநகர்ப் பகுதி ஆகும்.. நகர மையத்தின் தெற்கே 11 km (6.8 mi) கிமீ (6.8 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம், பாயான் லெப்பாஸ் புறநகர்ப் பகுதிக்குள் அமைந்துள்ளது.
மேலும், இந்த நகரம் பாயான் லெப்பாஸ் தீர்வையற்ற தொழில்துறை மண்டலம், ரிலாவ், சுங்கை அரா மற்றும் புக்கிட் ஜம்புல் ஆகியவற்றை ஒட்டியுள்ளது.
இந்த நகர்ப்புறம் 1970-ஆம் ஆண்டுகளில் அந்த பகுதியின் உருவாக்கத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.. [3] அப்போதிருந்து, பல்வேறு வணிக மற்றும் சில்லறை வளர்ச்சிகளுடன், பாயான் பாரு ஒரு வளர்ந்து வரும் சுற்றுப்புறமாக உருவெடுத்துள்ளது.
பாயான் பாரு முதன்முதலில் 1972-ஆம் ஆண்டில் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தால் (பி. டி. சி.) உருவாக்கப்பட்டது. பாயான் லெபாஸ் தீர்வையற்ற தொழில்துறை மண்டலத்தின் கட்டுமானத்துடன் இணைந்து.[3]புதிய நகரியத்தை உருவாக்குவது ஒரு முன்னோடித் திட்டமாக இருந்தது.
பாயான் லெப்பாஸ் புறநகர்ப் பகுதியில் புதிதாக கட்டப்படும் தொழிற்சாலைகளை ஒட்டிய இடங்களில், புதிய வீட்டுப் பகுதிகளை அமைப்பது; நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு இடையிலான சமூக மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது; போன்றவை அந்த முன்னோடித் திட்டத்தின் நோக்கமாக இருந்தது.[4]
அண்மைய ஆண்டுகளில், பினாங்கு மாநில அரசு, பாயான் பாருவை வணிகச் செயலாக்க மையமாக மேம்படுத்துவதற்கு முதலீடுகளை ஒதுக்கியுள்ளது.
இந்த முதலீடுகளில் மல்டிமீடியா சூப்பர் காரிடார் (எம். எஸ். சி. சி.) -நிலையிலான உள்கட்டமைப்பு; அதாவது சன்டெக் டவர் மற்றும் ஒன் பிரசிங்க்ட் ஆகியவை அடங்கும்.[5]
செலஸ்டிகா, கீயன்ஸ், சுவரோவ்ஸ்கி, ஜபில், டெலிபெர்பார்மன்ஸ், குயென் / நாகல் மற்றும் சூரிச் காப்புறுதி நிறுவனம் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே இப்பகுதியில் தங்களின் வணிக மையங்களை அமைத்துள்ளன.[6][7][8]