பாய்வுக் குழாய் (flux tube) என்பது காந்தப் புலம் செயல்படும் இடத்தில் உருளை வடிவக் குழாய் வடிவில் இருக்கும் ஒரு வெளி ஆகும். குழாயின் குறுக்குவெட்டுப்பரப்பு மற்றும் காந்தப்புலம் குழாயின் நீளவாக்கில் மாறிக்கொண்டே இருக்கும், ஆனால் காந்தப்பாயம் மாறாமல் இருக்கும்.
பாய்வுக் குழாய் என்ற கருத்தை வானியற்பியலில் பயன்படுத்துகிறார்கள். பாய்வுக் குழாய்கள் விண்வெளிகளில் இருக்கும் சூரியன் போன்ற விண்மீன்களில் காணப்படுகிறது. இவை கிட்டத்தட்ட 300 கி.மீ. விட்டம் கொண்டவை.[1] சூரியப்புள்ளிகளும் 2500 கி.மீ. விட்டம் கொண்ட பெரிய பாய்வுக்குழாய்களைக் கொண்டுள்ளன.[1] வியாழன் கோளுக்கும் அதன் துணைக்கோளான ஐஓவிற்கும் இடையே உள்ள வெளியில் காணப்படும் பாய்வுக் குழாய் மிகவும் பிரசித்திபெற்ற பாய்வுக்குழாய்களில் ஒன்றாகும்.