பாரதி விஷ்ணுவர்தன் |
---|
பிறப்பு | பாரதிதேவி 15 ஆகத்து 1950 (1950-08-15) (அகவை 74) மைசூர் மாநிலம் (தற்போது கருநாடகம்), இந்தியா |
---|
தேசியம் | இந்தியர் |
---|
பணி | நடிகை, பின்னணிப் பாடகி, இணை இயக்குநர் |
---|
செயற்பாட்டுக் காலம் | 1966 – தற்போது வரை |
---|
பெற்றோர் | தந்தை : இராமச்சந்திரராவ் தாயார் : பத்ராவதி |
---|
வாழ்க்கைத் துணை | விஷ்ணுவர்தன் (1975 – 2009;அவரது இறப்பு வரை) |
---|
பிள்ளைகள் | கீர்த்தி, சந்தனா |
---|
விருதுகள் | பத்மசிறீ (2017) |
---|
பாரதி விஷ்ணுவர்தன் (பிறப்பு:15 ஆகத்து 1950)[1] ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் விஷ்ணுவர்தனின் மனைவியும் ஆவார்.[2] இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த திரைப்படங்களில் கன்னட மொழித் திரைப்படங்களே அதிகமாகும். இவர் அப்போது கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையான சரோஜாதேவியின் முகசாயலில் இருந்தார் என்றும் கூறப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]
இவர் இந்தியாவின், மைசூர் மாநிலத்தில் (தற்போது கருநாடகம்) பிறந்தார். இவரது இயற்பெயர் பாரதிதேவி ஆகும். இவர் புகழ்பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் விஷ்ணுவர்தனை 1975, பிப்ரவரி 27 அன்று பெங்களூரில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கீர்த்தி, சந்தனா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் விஷ்ணுவர்தன் 2009, திசம்பர் 30 அன்று காலமானார்.[3]
நடித்த திரைப்படங்கள்
[தொகு]
தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]
ஆண்டு
|
திரைப்படம்
|
ஏற்ற வேடம்
|
இயக்குநர்
|
உடன் நடித்தவர்கள்
|
1966 |
நாடோடி |
மீனா |
பி. ஆர். பந்துலு |
எம். ஜி. இராமச்சந்திரன், சரோஜா தேவி
|
1966 |
சந்திரோதயம் |
கமலா |
கே. சங்கர் |
எம். ஜி. இராமச்சந்திரன், ஜெயலலிதா
|
1966 |
எங்க பாப்பா |
|
பி. ஆர். பந்துலு |
ரவிச்சந்திரன்
|
1966 |
நம்ம வீட்டு லட்சுமி |
|
பி. ஆர். பந்துலு |
முத்துராமன்
|
1967 |
தங்கத் தம்பி |
சரஸ்வதி/சரசு |
பிரான்சிஸ் ராம்நாத் |
ரவிச்சந்திரன், வாணிஸ்ரீ, நாகேஷ்
|
1967 |
தெய்வச்செயல் |
|
எம். ஜி. பாலு |
முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன்
|
1967 |
வாலிப விருந்து |
|
முரசொலி மாறன் |
ரவிச்சந்திரன், நாகேஷ்
|
1967 |
நான் யார் தெரியுமா |
|
வி. என். ரமணன் |
ஜெய்சங்கர், சோ
|
1968 |
உயர்ந்த மனிதன் |
கௌரி |
கிருஷ்ணன்-பஞ்சு |
சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, சிவகுமார், வாணிஸ்ரீ
|
1968 |
நிமிர்ந்து நில் |
ராதா
|
தேவன் |
ரவிச்சந்திரன்
|
1968 |
பூவும் பொட்டும் |
அமுதா |
தாதா மிராசி |
ஏ. வி. எம். ராஜன், முத்துராமன், பானுமதி
|
1969 |
நான்கு கில்லாடிகள் |
|
எல். பாலு |
ஜெய்சங்கர், மேஜர் சுந்தரராஜன்
|
1969 |
தங்கச் சுரங்கம் |
அமுதா |
டி. ஆர். ராமண்ணா |
சிவாஜி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா
|
1969 |
நில் கவனி காதலி |
|
சி. வி. ராஜேந்திரன் |
ஜெய்சங்கர், நாகேஷ்
|
1970 |
சிநேகிதி |
|
ஜி. ராமகிருஷ்ணன் |
ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், சரோஜாதேவி
|
1971 |
அவளுக்கென்று ஒரு மனம்
|
|
சிறீதர் |
ஜெமினி கணேசன், காஞ்சனா, முத்துராமன்
|
1971 |
மீண்டும் வாழ்வேன் |
|
டி. என். பாலு |
ரவிச்சந்திரன், ஆர். எஸ். மனோகர்
|
1972 |
அன்னமிட்ட கை |
மருத்துவர் கல்பனா |
எம். கிருஷ்ணன் நாயர் |
எம். ஜி. இராமச்சந்திரன், ஜெயலலிதா
|
1972 |
உனக்கும் எனக்கும் |
|
என். எஸ். மணியம் |
ஜெய்சங்கர், சோ ராமசாமி
|
1972 |
பொன்வண்டு |
|
என். எஸ். மணியம் |
ஜெய்சங்கர், உஷாந்தினி
|
1977 |
நீ வாழவேண்டும் |
|
ஏ. பீம்சிங் |
ரவிச்சந்திரன், நாகேஷ்
|
1990
|
உறுதிமொழி
|
|
ஆர். பி. உதயகுமார்
|
பிரபு, சுகன்யா
|
1995
|
கட்டபஞ்சாயத்து
|
|
|
கார்த்திக், கனகா
|
1998
|
சுந்தர பாண்டியன்
|
|
|
கார்த்திக், சுவாதி
|