பாரதிய கிசான் சங்கம் (Bharatiya Kisan Sangh) (BKS), (மொழிபெயர்ப்பு: இந்திய விவசாயிகள் சங்கம்), ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்த்தின் இணைப்பு பெற்ற இந்திய விவசாயிகள் அமைப்பாகும்.[1]பாபுராவ் தெங்காடியின் வழிகாட்டுதலின் பேரில், பகு சாகிப் பாஸ்குடே என்பவரால் 1978ஆம் ஆண்டில் அரசியல் சார்பற்ற அமைப்பாக, பாரதிய கிசான் சங்கத்தை மத்தியப்பிரதேசத்தில் பதிவு அமைக்கப்பட்டது. அனைத்து இந்திய மாநிலங்களில் இதன் கிளைகள், இரண்டு கோடி விவசாய உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[2] 2005இல் பாரதிய கிசான் சங்கத்தின் பொதுச்செயலராக பிரபாகர கேல்கரும், தலைவராக அனிருத்தர முர்குடே என்பவரும் செயல்படுகின்றனர்.
இந்திய வேளாண்மை கட்டமைப்பை வலுப்படுத்த 20 பில்லியன் டாலர் ஒதுக்க, மார்ச் 2005 அன்று இந்திய அரசை வலியுறுத்தியது.[3]
பாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த பருத்திக்கு போதிய ஆதார விலை நிர்ணயிக்கக் கோரி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.[4]
13 செப்டம்பர் 2013 அன்று இந்தியா முழுவதிலிருந்து ஒன்றை இலட்சம் விவசாயிகளைத் திரட்டி பேரணியை நடத்தி, லால் லீலா மைதானத்தில் நிறைவுக் கூட்டம் நடத்தினர்.