பாரதிய ஜனதா கட்சி தொடர்பான தலைப்புகள் |
பாரதிய ஜனதா கட்சி |
---|
![]() |
தலைப்புகள் |
|
தேசியக் குழுக்கள் |
|
தேசிய அணிகள் |
|
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு (organisation of the Bharatiya Janata Party), பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு விதிகளில் கூறியுள்ளவாறு இதன் அமைப்பு செயல்படுகிறது.[1] பாரதிய ஜனதா கட்சி அமைப்பில் அதன் தலைவரே உயர் அதிகாரம் படைத்தவர். இந்துத்துவா, இந்து தேசியம் போன்ற கருத்தியல் உணர்வுகள் உள்ளர்கள் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி அமைப்பின் நிர்வாகிகளாக இயங்க இயலும். இதன் தாய் அமைப்பு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் ஆகும்.[2][3]
2019-ஆம் ஆண்டு முடிய, இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் பெருமளவில் உள்ளனர். இந்தியாவில் பெரும் அரசியல் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்துள்ளது. மேலும் இக்கட்சி உலக அளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சியாக முதலிடத்தில் உள்ளது.[4]
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம், பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பாக விளங்குகிறது. மேலும் சங்கப் பரிவார் அமைப்பின் உறுப்பினர்களில் பலர் பாரதிய ஜனதா கட்சியிலும் உறுப்பினராக உள்ளனர்.
இக்குழுவில் கட்சியின் மூத்த தலைவர்களான லால் கிருஷ்ண அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, நரேந்திர மோதி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் உள்ளனர்.[5]
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. ஆனால் ஒருவர் அதிக பட்சமாக இரண்டு முறை மட்டுமே தேசியத் தலைவராக பதவி வகிக்க இயலும்.[6] தேசியக் குழு மற்றும் மாநிலக் குழு உறுப்பின்ரகளால் தேசியத் தலைவர் தேர்வு செய்யப்படுவார். பொதுவாக தேசியத் தலைவரை, கட்சியின் மூத்த தலைவர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார். [6]
கட்சியின் தேசியத் தலைவரின் கீழ் இயங்கும் தேசிய செயற்குழு உறுப்பினர்களை தேசியத் தலைவர் நியமிப்பார். இதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 120 ஆகும். கட்சித் தலைவருக்கு உதவிட தேசிய நிர்வாகக் குழுவில் 7 துணைத் தலைவர்கள், 5 பொதுச்செயலாளர்கள், ஒரு பொதுச் செயலாளர் (அமைப்பு), ஒரு பொருளாளர் மற்றும் 5 செயலாளர்கள் செயல்படுவர். மாநில, பிராந்திய, மாவட்டம் மற்றும் உள்ளூர் மட்டத்தில் ஒரே மாதிரியான அமைப்பு, ஒரு தலைவர் தலைமையிலான நிர்வாகக் குழு உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியை ஆளும் குழுவாகும். இது தேசிய செயற்குழுவின் சார்பாக அன்றாட முடிவுகளை எடுக்கும் அமைப்பாகும். தேசிய செயற்குழுவானது பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிக்கிறது. மாநிலங்களின் சட்டமன்ற குழுக்களின் செயல்பாடுகளை நாடாளுமன்றக் குழு மேற்பார்வையிடுகிறது. தேசிய செயற்குழுவிற்கு கீழே உள்ள அனைத்து நிறுவன அலகுகளையும் நாடாளுமன்றக் குழு வழிகாட்டுவதுடன், ஒழுங்குபடுத்துகிறது.[7]
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவானது 19 பேர் கொண்ட மத்திய தேர்தல் குழுவை நியமிக்கிறது.[8] இந்தியா முழுவதும் உள்ள கட்சியின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதே மத்திய தேர்தல் குழுவின் பணியாகும்.[9][10][11]
கட்சியின் கொள்கையை வகுப்பதில் தேசியக் குழு உயர்ந்த அமைப்பாகும். தேசிய நிர்வாகக் குழுவினரால் கட்சி அமைப்பு விதிகளில் செய்யும் திருத்தங்கள், மாற்றங்கள், சேர்க்கைகளை தேசியக் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டே பிறகே நடைமுறைக்கு வரும். மூன்று ஆண்டுகளுக்கு ஓரு முறை மாநிலங்களின் குழுக்களுடன், தேசியக் குழுவினர் இணைந்து கட்சியின் தேசியத் தலைவரை தேர்வு செய்யும். தேசியக் குழு உறுப்பினர்களை மாநிலக் குழு உறுப்பினர்கள், முன்னாள் தேசியத் தலைவர்கள், மாநிலங்களின் சட்டமன்ற கட்சித் தலைவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் அணித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10%, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வர்.
பாரதிய ஜனதா கட்சியின் ஊடகப் பிரிவு கட்சியின் தகவல் தொழில்நுட்பங்களை நிர்வகிக்கிறது.[12][13][14]
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தலைமையின் கீழ், மாநிலத்தின் அனைத்து பிரிவுகளும் இயங்கும்.
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டக் குழு, ஒரு தலைவர், 6 துணைத் தலைவர்கள், 4 பொதுச் செயலாளர்கள் மற்றும் 6 செயலாளர்கள் தலைமையில் நிர்வகிக்கப்படுகிறது.
மண்டல அளவில் ஒரு தலைவர் மற்றும் 2 பொதுச்செயலாளர் மற்றும் 4 செயலாளர்கள் தலைமையில் நிர்வகிக்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படைத் தத்துவமான ஒருங்கிணைந்த மனிதநேயத்தை நான் நம்புகிறேன் நான் இந்திய தேசியம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு, ஜனநாயகம், காந்திய சோசலிசம், நேர்மறை மதச்சார்பின்மை மற்றும் மதிப்பு அடிப்படையிலான அரசியல், மதச்சார்பற்ற அரசு மற்றும் மதத்தின் அடிப்படையில் இல்லாத தேசம் என்ற கருத்துக்கு இணங்க நான் சந்தா செலுத்துகிறேன். இந்த பணியை அமைதியான வழியில் மட்டுமே அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் தீண்டாமையை எந்த வடிவத்திலும் அங்கீகரிக்கவில்லை. நான் வேறு எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை. கட்சியின் அரசியலமைப்பு, விதிகள் மற்றும் ஒழுங்குமுறைக்கு நான் கட்டுப்படுகிறேன். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் உறுதிமொழி[1]
18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக சேர முடியும். வேறு கட்சியில் உறுப்பின்ராக இருப்பின், அதிலிருந்து முற்றிலும் விலகிய பின் கட்சி உறுப்பினராகலாம். உறுப்பினர் காலம் 6 ஆண்டுகள் மட்டுமே.[1] 2019-ஆம் ஆண்டு முடிய உலக அளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்துள்ளது.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)