உருவாக்கம் | 18 பெப்ரவரி 1944 |
---|---|
நிறுவனர் | சாகு சாந்தி பிரசாத் ஜெயின் |
வகை | அறக்கட்டளை |
சட்ட நிலை | செயலில் உள்ளது. |
நோக்கம் | இந்திய இலக்கிய ஆராய்ச்சிக்கான அமைப்பு |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
தலைமையகம் |
|
சேவை பகுதி | இந்தியா |
வலைத்தளம் | jnanpith.net |
பாரதிய ஞானபீடம் (Bharatiya Jnanpith) 18 பிப்ரவரி 1944-இல் சாகு சாந்தி பிரசாத் ஜெயின் என்பவரால் துவக்கப்பட்ட பாரதிய ஞானபீடம், இந்திய இலக்கிய ஆராய்ச்சி அமைப்பாகும். இதன் தலைமையிடம் புது தில்லியில் உள்ளது.[1][2]இந்த அமைப்பு சமசுகிருதம், பிராகிருதம், பாளி, மற்றும் அபபிரம்சா மொழிகளின் சமயம், கவிதை, இலக்கியம், தத்துவம், தர்க்கம், இலக்கணம், சோதிடம், வானவியல் மற்றும் அறநெறிச் சார்ந்த சுவடிகளை, காகிதத்தில் நூல் வடிவத்தில் வெளியிடுவதுடன்,[1]ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கிறது. இநத அமைப்பு இந்திய அரசியலமைப்பு அங்கீகாரம் அளித்த இந்திய மொழிகளில் இலக்கியம் படைத்தோருக்கு ஆண்டு தோறும் ஞானபீட விருது மற்றும் மூர்த்திதேவி விருதுகளை வழங்குகிறது. இந்த அமைப்பு பல நூல்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் மூர்த்திதேவி கிரந்த மாலை மற்றும் லோகாதய கிரந்தமாலை எனும் இரண்டு நூல்களை முதன்மையானது.
இந்த அமைப்பு வழங்கும் ஞானபீட விருதுகள், தமிழ் மொழியில் எழுத்தாளர் அகிலனுக்கு 1975-ஆம் ஆண்டிலும் மற்றும் ஜெயகாந்தனுக்கு 2002-ஆம் ஆண்டிலும் வழங்கப்பட்டது.[3]