பாரத் ஆதிவாசி கட்சி | |
---|---|
Bharat Adivasi Party.png | |
சுருக்கக்குறி | BAP |
தலைவர் | மோகன் லால் ரோத் |
தொடக்கம் | 10 செப்டம்பர் 2023 |
பிரிவு | பாரதிய பழங்குடியினர் கட்சி |
தலைமையகம் | இராஜஸ்தான் |
கொள்கை | பழங்குடியினர் நலன் |
நிறங்கள் | சிவப்பு |
இ.தே.ஆ நிலை | பதிவு செய்யப்பட்டது |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (இராசத்தான் சட்டப் பேரவை) | 3 / 200
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மத்தியப் பிரதேச சட்டப் பேரவை) | 1 / 230
|
இணையதளம் | |
bharatadivasiparty | |
இந்தியா அரசியல் |
பாரத் ஆதிவாசி கட்சி (Bharat Adivasi Party) (சுருக்கமாக: BAP) இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் செயல்படும் மாநில அரசியல் கட்சி ஆகும். இது இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இது பாரதிய பழங்குடியினர் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மோகன் லால் ரோத் தலைமையில் 10 செப்டம்பர் 2023 அன்று நிறுவப்பட்டது.[1]. இதன் முதன்மை குறிக்கோள் ஆதிவாசிகளின் நலன்களை மேம்படுத்துவதாகும்.
பாரத் ஆதிவாசி கட்சி 2023 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று தொகுதிகளையும்[2]; மற்றும் 2023 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது.[3]இக்கட்சியின் தலைவர் இராஜ்குமார் ரோத் இராஜஸ்தானின் சோராசி சட்டமன்றத் தொகுதியில் 69 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4]இக்கட்சியின் கமலேஷ்வர் தோதியார், மத்தியப் பிரதேசத்தின் சைல்னா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தம்மை எதிர்த்து நின்ற பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளர்களை வென்றார்.[5]