2015இல் பாரத் பவன் நுழைவாயில் | |
உருவாக்கம் | 13 பெப்ரவரி 1982 |
---|---|
சட்ட நிலை | அறக்கட்டளை |
நோக்கம் | காட்சி கலைகள்,கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை, இலக்கியம் |
தலைமையகம் |
|
மைய அமைப்பு | பாரத் பவன் அறக்கட்டளை |
வலைத்தளம் | bharatbhawan |
பாரத் பவன் (Bharat Bhavan) என்பது இந்தியாவின் போபால் நகரில் மைந்துள்ள ஒரு தன்னாட்சி பெற்ற பல கலைகள் கொண்ட வளாகம் மற்றும் அருங்காட்சியகம் ஆகும். மத்தியப் பிரதேச அரசு இதை நிறுவி, நிதியுதவி செய்கிறது. கட்டடக் கலைஞர் சார்ல்ஸ் கோர்ரியா இதை கட்டியுள்ளார். 1982ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட போபால் ஏரியின் மேல் பகுதியை நோக்கி அமைந்திருக்கும் இது ஒரு கலைக்கூடம், நுண்கலைக் கூடம், ஒரு திறந்தவெளி அரங்கு, ஒரு திரையரங்கம், ஒரு மண்டபம், ஒரு பழங்குடி மற்றும் நாட்டுப்புற கலைகளின் அருங்காட்சியகம், இந்திய கவிதை நூலகங்கள், பாரம்பரிய இசை, நாட்டுப்புற இசை ஆகியவை அடங்கியுள்ளது.
1980களின் முற்பகுதியில், தேசிய தலைநகரங்களில் பிராந்திய மையங்களின் மூலமாக இந்திய கலைகளை வளர்ப்பதில் நாடு முழுவதும் அரசு கவனம் செலுத்தியது. உஜ்ஜயினியில் காளிதாஸ் அகாடமி என்ற இலக்கிய அமைப்பை நிறுவுவதற்கு காரணமாக இருந்த மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தில் (1966-1992) ஒரு இந்திய ஆட்சிப் பணி இயக்குநராக இருந்த அசோக் வாஜ்பாய் இதற்கான முயற்சியை முன்னெடுத்தார்,[1] இது 1983 இல் திறக்கப்பட்டது. இந்தியாவின் பல பகுதிகளிலும் சில கலாச்சார முயற்சிகள் பல ஆண்டுகளாக தோல்வியில் முடிந்தாலும், இத்தகைய பாரத் பவன் திட்டம் போபால் நகரில் (இந்தியா ஹவுஸ்) வெற்றி பெற்றது.
இந்திய பிரதமர் இந்திரா காந்தியால் மத்திய பிரதேச மாநிலத்தின் கலாச்சார மையம் நிறுவப்பட்டு நிதியுதவியும் அளித்தார் [2][3] ஆனாலும் இது தன்னாட்சியுடன் 12-உறுப்பினர்களைக் கொண்ட பாரத பவன் எனற அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது.[3] அடுத்த பத்தாண்டுகளில், இந்தோர் நிறுவனம், ஜபல்பூர், மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களிலிருந்து மாணவர்களையும், வெளிநாட்டு பார்வையாளர்களையும் கலைஞர்களையும் மற்றும் அறிஞர்களையும், கவர்ந்திழுக்க ஆரம்பித்ததால், இந்த நிறுவனம் இந்தியாவின் ஒரு முக்கியமான கலாச்சார நிறுவனமாக வளர்ந்தது.[4][5]
இது உருவாக ஆரம்பித்த ஆண்டுகளில், ரங்கமண்டல் ரெபெர்ட்டரி என்ற அமைப்பின் தலைவராக இருந்த பி. வி. ஆர். கரந்த், இந்த பிராந்தியத்தின் நாட்டுப்புற வடிவங்களை குறிப்பாக இந்தியை தனது வேலையில் இணைத்து, பாரத் பவனில் தனது பல நிகழ்ச்சிகளை நடத்தினார்.[6][7] பாரத் பவன் பையென்னியல் ஆஃப் காண்டெம்ப்ரரி இன்டியன் ஆர்ட்" 1986இல் துவக்கப்பட்டது, அதன் பிறகு 1989 ஆம் ஆண்டில் "பாரத் பவன் இண்டர்நேஷனல் பிரிண்ட் பையென்னியல்" துவக்கப்பட்டது. இந்த வளாகம் அதன் கலை அருங்காட்சியகம், ரூபான்கர் என்ற பெயரில் அறியப்படுகிறது, இதில் பழங்குடி மக்களின் கலைகள் நிரந்தர சேகரிப்பாக உள்ளது, அதன் ஆரம்ப வருடங்களில் ஜே. சுவாமிநாதனால் சேகரிக்கப்பட்டது [8] மேலும், இந்தியாவில் பழங்குடி மக்களின் கலைகளின் சிறந்த எடுத்துக்காட்டுகளை பாரத் பவன் பிரதிபலிக்கிறது.[9]
இந்த வளாகத்தில் இந்திய ஓவியம் மற்றும் ஒரு கலைக்கூடம், நுண்கலைக் கூடம், ஒரு திறந்தவெளி அரங்கு, ஒரு திரையரங்கம், ஒரு மண்டபம், ஒரு பழங்குடி மற்றும் நாட்டுப்புற கலைகளின் அருங்காட்சியகம், இந்திய கவிதை நூலகங்கள், பாரம்பரிய இசை, நாட்டுப்புற இசை ஆகியவை அடங்கியுள்ளது. இது மட்டுமல்லாமல், கலைஞர்களும், எழுத்தாளர்களும் பவனில் உள்ள "ஆஸ்ரம்" என்பதில் தங்கி தங்களை வெளிபடுத்துகிறார்கள். பல ஆண்டுகளாக, இது ஒரு பிரபலமான சுற்றுலா மையமாக உள்ளது.[10]