பாரத் ராம் (Bharat Ram) அல்லது லாலா பாரத் ராம் (15 அக்டோபர் 1914 - 11 ஜூலை 2007) ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார்.
இவர் பிரித்தானிய இந்தியாவில் தில்லியில் பிறந்த ராம், தில்லி கிளாத் & ஜெனரல் மில்ஸை நிறுவிய லாலா ஸ்ரீ ராமின் மகன். [1] ராம் தனது ஆரம்பக் கல்வியை புதுதில்லியின் மாடர்ன் பள்ளியில் முடித்தார். டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார். 1935 இல் பட்டம் பெற்ற பிறகு, தில்லி கிளாத் & ஜெனரல் மில்ஸில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். 1958 இல் அதன் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் உயர்ந்தார்.
ராம் 1970 இல் ஸ்ரீராம் ஃபைபர்ஸ், ஸ்ரீ ராம் உரங்கள் என்ற நிறுவனங்களை நிறுவினார். பல்வேறு அரசாங்க குழுக்களிலும் பணியாற்றினார். தொழில்துறை இந்தியாவின் பார்வை மற்றும் இஸ்தான்புல்லில் இருந்து வியன்னா வரை என்றஇரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 1972 இல் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி கௌரவித்தது. [1]
குழிப்பந்தாட்டம் மீது ஆர்வம் காரணமாக இந்திய குழிப்பந்தாட்ட அமைப்பை உருவாக்க உதவினார்.
ராம் 11 ஜூலை 2007 அன்று புது தில்லி மருத்துவமனையில் இறந்தார் [2]