பாராப்டெரோயிசு | |
---|---|
![]() | |
பாரப்டெரோயிசு கெட்டுரா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுகார்பேனிபார்ம்சு
|
குடும்பம்: | இசுகார்பேனிடே
|
பேரினம்: | பாராப்டெரோயிசு
|
வேறு பெயர்கள் | |
பரபிரசிரசு மாட்சுபரா, 1943 |
பாராப்டெரோயிசு (Parapterois) என்பது தேள் மீன் குடும்பமான இசுகார்பெனிடே குடும்பத்தைச் சேர்ந்த கடல் கதிர்- துடுப்பு மீன்களின் பேரினமாகும். இந்த மீன்கள் இந்தியப் பெருங்கடலில் அல்லது அதற்கு அருகில் உள்ள கடல் சூழலிலிருந்து உருவாகியுள்ளன. விசமுள்ள பாராப்டெரோயிசு கெட்டுரா மீன் காட்சியகங்களில் அரிதாகக் காணப்படுகிறது.
1876ஆம் ஆண்டில் இடச்சு மருத்துவர், ஊர்வன மற்றும் மீனியலாளர் பீட்டர் ப்ளீக்கரால் பாராப்டெரோயிசு ஒரு பேரினமாக விவரிக்கப்பட்டது. ப்ளீக்கர் 1856ஆம் ஆண்டில் அம்போன் தீவில் கண்டுபிடித்த மீனினை டெரோயிசு கெட்டெருசசுஐ புதிய பேரினத்தின் மாதிரி இனமாக விவரித்தார்.[1] இந்தப் பேரினமானது இசுகார்பேனிடே குடும்பத்தில் உள்ள இசுகார்பெனினே துணைக் குடும்பத்தின் டெட்டெரோனி இனக்குழுவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பேரினப் பெயர் "அருகில்" என்று பொருள்படும் பாரா கலவையாகும். பாரப்டெரோயிசு, பிளீக்கர் பேரினமானது பா. கெட்டுராவை முதலில் கொண்டுள்ளது.[2]
இந்த பேரினத்தில் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:
படம் | விலங்கியல் பெயர் | பரவல் |
---|---|---|
![]() |
பாரப்டெரோயிசு கெட்டுரா (பீளீக்கர், 1856) (கருப்புக்கால் நெருப்பு மீன்) | ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு கடற்கரை மற்றும் சப்பான் மற்றும் இந்தோனேசியா |
![]() |
பாரப்டெரோயிசு மாக்ருரா (அல்காக், 1896) | இந்தியாவின் மேற்கு கடற்கரை |
மூன்றாவது சிற்றினமான, பாரப்டெரோயிசு நைக்ரிபின்னிசு (கில்கிறிசுட், 1904), இந்தியப் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் உள்ளதை மீன்களின் பட்டியல் அங்கீகரித்துள்ளது.[3]
பாரப்டெரோயிசு உடல்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும், குறுக்கு துடுப்பு விரிவடைந்தும் காணப்படும். இந்த மீன்கள் வசத்தன்மை கொண்டவை. இருப்பினும், பெரும்பாலானவை மிகவும் சிறியவை. இரண்டு சிற்றினங்களின் பெரிய மீன்கள் சுமார் 11 சென்டிமீட்டர்கள் (4 இல்) நீளம் வரை வளரக்கூடியன.[4]
பல வேறுபாடுகள் இந்த பேரினத்தை சேவல்கோழி மீன் பேரினமான டெரோசிலிருதுவேறுபடுத்துகின்றன, இதில் பா. கெட்டுரா முதலில் விவரிக்கப்பட்டது. டெரோசைவிட (12-17) பாரப்டெரோயிசு அதிக (18-21) மார்புத் துடுப்பு கதிர்களைக் கொண்டுள்ளது. மேலும், இந்த கதிர்கள் கிளைகளாக இருக்கலாம், அதே சமயம் இவை டெரோசில் ஒருபோதும் கிளைத்திருக்காது. பாரப்டெரோயிசு இரண்டு குத துடுப்பு முதுகெலும்புகளுடன் காணப்படும். டெரோசில் மூன்று உள்ளன. மேலும், மிகவும் வெளிப்படையான பண்பாக, இந்த மீன்களின் வால் துடுப்பு நீண்ட மேல் மற்றும் கீழ் வால் துடுப்பு கதிர்களால் வேறுபடுகிறது. அதே சமயம்டெரோசில் உள்ள வால் துடுப்பு வட்டமானது.[4]
பாரப்டெரோயிசு இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் காணக்கூடியது.
மற்ற சேவல்கோழி மீன்களைப் போலப் புகழ் பெற்றபோதிலும், பாராப்டெரோயிசு சிற்றினங்கள் மீன் வணிகத்தில் அரிதாகவே காணப்படுகின்றன.[5] பா. கெட்டுரா சில இணையவழி கடல் மீன், மீன் கடைகளில் காணலாம்.