![]() சுங்கை கிரியான் நதியோரத்தில் பாரிட் புந்தார் நகரம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°7′14″N 100°29′26″E / 5.12056°N 100.49056°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கிரியான் |
உருவாக்கம் | 1800 |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 26,328 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
பாரிட் புந்தார் (Parit Buntar) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால்; மற்றும் கெடா மாநிலத்தின் பண்டார் பாரு ஆகிய நகரப் பகுதிகளுடன் எல்லையாகக் கொண்டது.
இங்கு பெருமளவில் பெரிய நெல் வயல்கள் உள்ளன. அதன் காரணமாக இந்த மாவட்டம் பேராக்கின் அரிசிக் களஞ்சியம் என்று அழைக்கப் படுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அதனால் வெள்ளப் பகுதிகளை மீட்டு எடுப்பதற்கும்; நெல் வயல்களின் உள்ளேயும் வெளியேயும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப் படுத்தவும்; பெரிய அளவிலான நீர்ப்பாசன முறை நடைமுறையில் உள்ளது.
இந்த நகரம் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. தீபகற்ப மலேசியாவில் வறண்ட காலம் என கருதப்படும் மாதங்களில்கூட மிக அதிகமாக மழை பெய்கிறது. வெப்பநிலை 27.3 °C (81.1 °F). ஆண்டு மழை சராசரியாக 2,304 mm (90.7 அங்) ஆகும்.[1]
சுங்கை ஆச்சே, பாகன் தியாங், தஞ்சோங் பியாண்டாங், கோலா குராவ் போன்ற இடங்களில் மீன்பிடித் தொழில் இரண்டாம் நிலை முக்கியத் தொழிலாக இடம் பெறுகிறது. எனினும் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பாரிட் புந்தார் நகர வளாகம்தான் (Parit Buntar City Center) வணிகத்திற்கும் தொழில்துறைக்கும் முதன்மை வகிக்கின்றது.
பாரிட் புந்தார் எனும் பெயர் தோக் புந்தார் எனும் பெயரில் இருந்து வருகிறது. முன்பு காலத்தில் தோக் புந்தார் எனும் தலைவர் இருந்தார். சுங்கை கிரியான் எனும் கிரியான் நதியில் இருந்து கால்வாய்களை வெட்டி நெல் வயல்களுக்கு நீர் பாய்ச்சும் திட்டத்தை கொண்டு வந்தார்.
முதன்முதலில் அவர் வெட்டிய கால்வாயின் பெயர் பாரிட் தோக் புந்தார் (Parit Tok Buntar). அந்த வகையில் அந்த இடத்திற்கும் பாரிட் புந்தார் என்று பெயர் வைக்கப்பட்டது.[2]
பாரிட் புந்தார் நகரத்தின் அடையாளச் சின்னமாக ஒரு மணிக்கூண்டு விளங்குகின்றது. இதைப் பெரிய மணி (Big Clock) என்று பாரிட் புந்தார் தமிழர்கள் அழைக்கிறார்கள்.
1961 ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி, பாரிட் புந்தார் மக்களின் வளப்பத்தையும் வளர்ச்சியையும் நினைவு கூரும் வகையில் இந்த மணிக்கூண்டு திறப்புவிழா நடைபெற்றது. மலேசியத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் திறப்புவிழா செய்தார்.
பாரிட் புந்தார் நகரின் மருங்கில் சுங்கை கிரியான் நதி ஓடுகிறது. இந்த நதியின் அமைதிக்குப் பின்னால் 1972 செப்டம்பர் மாதம் நடந்த ஒரு சோகம் நிகழ்ச்சியும் உள்ளது. 20 உயிர்களைப் பலி கொண்ட நிகழ்ச்சி. பெரும்பாலும் பள்ளி குழந்தைகள்.
பாரிட் புந்தாரில் உள்ள பள்ளிக்குச் செல்ல படகுகளைப் பயன்படுத்தி ஆற்றைக் கடந்த மாணவர்கள் பலியானார்கள். அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் படகு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. ஒரு பாலம் கட்டப்பட்டது.[3] Behind the serenity of Sungai Kerian was a ferry tragedy that took place in September 1972. It claimed about 20 lives, mostly school children from Bandar Baharu, Kedah who crossed the river using the ferry to attend school in Parit Buntar, Perak.]</ref>
பாரிட் புந்தார் நகரத்தைச் சென்று அடைவதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
பாரிட் புந்தார் நகரில் இரு தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. மிகப் பழைமை வாய்ந்த பள்ளிகள். அவற்றில் ஒன்று பாரிட் புந்தார் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி. மலேசியாவில் மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். 116 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பள்ளி.
1905-ஆம் ஆண்டில், ஏறக்குறைய 20 மாணவர்களையும் ஓர் ஆசிரியரையும் கொண்டு ஒரு சின்ன வீட்டில் இந்தப் பள்ளித் தொடங்கப்பட்டது. இப்போது அந்தப் பள்ளியில் 375 மாணவர்கள்; 25 ஆசிரியர்கள். இந்தப் பள்ளியில் பேரணி மண்டபம், அறிவியல் கூடம், வாழ்வியல் கூடம்; ஆசிரியர் அறை, அலுவலகம், நூலகம், கணினிக்கூடம், நடவடிக்கை அறை போன்றவை அனைத்து அறைகளும் குளிர்சாதன வசதிகளுடன் அமைந்து உள்ளன. மலாயா தமிழர்களின் வரலாற்றில் மற்றும் ஒரு சாதனை.
முன்பு காலத்தில் அந்தப் பள்ளியும் அதைச் சார்ந்த நிலமும் வழிபாடு செய்யும் நோக்கத்திற்காக ஒரு கொடை நெஞ்சரால் தொடக்கத்தில் வழங்கப்பட்டது. பள்ளி நாட்களில் பாடங்கள் கற்பிக்கவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டிற்காகவும் இந்த இல்லத்தைப் பயன்படுத்தினார்கள். அந்தச் சமயத்தில் இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக திரு.எம். அந்தோணிசாமி என்பவர் சேவையாற்றினார்.
1928-ஆம் ஆண்டில், மாணவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்தது. 1938-ஆம் ஆண்டில், மாணவர்களின் எண்ணிக்கை 70. அதே 1938-ஆம் ஆண்டில் மூன்று வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தில் கான்வெண்ட் ஆங்கிலப் பள்ளி கட்டப்பட்டது.
1945-ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்த ஆங்கிலப்பள்ளி தைப்பிங்கிற்கு மாற்றம் கண்டது. 1946-ஆம் ஆண்டில் கான்வெண்ட் ஆங்கிலப் பள்ளியின் கட்டிடம் முழுமையாகத் தமிழ்ப் பள்ளிக்காகக் கொடுக்கப்பட்டது.
1957-ஆம் ஆண்டில் பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய திரு.எஸ்.சபாரத்தினம்; டென்னிஸ்டவுன் தோட்டத் தமிழ்ப் பள்ளியையும் இந்தத் தமிழ்ப்பள்ளியோடு இணைக்க முயற்சிகள் செய்தார்.
1961 மார்ச் 8-ஆம் தேதி இந்தத் திட்டம் நிறைவேற்றம் கண்டது. மாணவர்களின் எண்ணிக்கை மென்மேலும் உயர்ந்தது. இதனைக் கருத்தில் கொண்டு மலேசிய அரசாங்கம் இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட ஒரு புதியக் கட்டிடத்தை 1961-ஆம் ஆண்டில் கட்டிக் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து நிபோங் திபால் டிரான்ஸ் கிரியான் தோட்டத் தமிழ்ப் பள்ளியிலிருந்து நான்காம் வகுப்பைச் சேர்ந்த 15 மாணவர்கள் இப்பள்ளிக்குப் பயில வந்தார்கள்.
1981-ஆம் ஆண்டு செயிண்மேரி தமிழ்ப்பள்ளி எனும் பழைய பெயர் “செயிண்மேரி தேசிய வகை தொடக்கத் தமிழ்ப்பள்ளி” எனும் புதிய பெயர் பெற்றது. 1991-ஆம் ஆண்டில் மேலும் நான்கு வகுப்பறைகள் கட்டப் பட்டன.
2002-ஆம் ஆண்டில் பாரிட் புந்தாரில் அமைக்கப்பட்ட வாவாசான் பள்ளி வளாகத்தில் செயிண்மேரி தமிழ்ப்பள்ளிக்குத் தனிக்கட்டடம் ஒதுக்கப்பட்டது. அவ்வாண்டு சூன் மாதம் தொடங்கி வாவாசான் பள்ளி வளாகத்தில் செயிண்ட் மேரி தமிழ்ப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இன்றைய நிலையில், கிரியான் மாவட்டத்திலேயே மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டு, மிக நவீன கட்டடத்தில் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி செயல்படுகிறது. தற்போது 375 மாணவர்களோடும் 25 ஆசிரியர்களோடும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. பேராக் மாநிலத்தில் ஒரு நவீனப் பள்லி எனவும் அடையாளம் கூறப் படுகிறது.[4]
கல்வித் துறையிலும் புறப் பாடத்திலும் இந்தப் பள்ளி குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. தொடர்ந்து பல சாதனைகளையும் வெற்றிகளையும் குவித்து வருகிறது.[5]
செயிண்மேரி வாவாசான் தமிழ்ப்பள்ளியின் அமைவிடம். https://mapio.net/pic/p-18129509/ [6]
பாரிட் புந்தார் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி (SJKT Simpang Lima Parit Buntar) மலேசியாவில் மற்றும் ஒரு பழைமையான தமிழ்ப்பள்ளி. 1919-ஆம் ஆண்டில் தோறுவிக்கப்பட்ட பள்ளி. இந்தப் பள்ளியில் 250 மாணவர்கள் பயில்கிறார்கள். [7]