பாரிட் புந்தார் (P057) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Parit Buntar (P057) Federal Constituency in Perak | |
மாவட்டம் | கிரியான் மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 68,502 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | பாரிட் புந்தார் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | பாரிட் புந்தார், நிபோங் திபால், கோலா குராவ், பாகன் செராய், செமாங்கோல், அலோர் பொங்சு, கிரியான் ஆறு |
பரப்பளவு | 145 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | மிசுபாகுல் முனீர் மசுக்கி (Mohd Misbahul Munir Masduki) |
மக்கள் தொகை | 73,366 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Parit Buntar; ஆங்கிலம்: Parit Buntar Federal Constituency; சீனம்: 巴里文打国会议席) என்பது மலேசியா, பேராக், கிரியான் மாவட்டத்தில் (Kerian District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P057) ஆகும்.[6]
பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பாரிட் புந்தார் சுற்றுப்புறப் பகுதிகளில் பெருமளவில் நெல் வயல்கள் உள்ளன. அதன் காரணமாக இந்த மாவட்டம் பேராக் மாநிலத்தின் அரிசிக் களஞ்சியம் என்று அழைக்கப் படுகிறது. பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால்; மற்றும் கெடா மாநிலத்தின் பண்டார் பாரு ஆகிய நகரப் பகுதிகளுடன் எல்லையாகக் கொண்டது.
சுங்கை ஆச்சே, பாகன் தியாங், தஞ்சோங் பியாண்டாங், கோலா குராவ் போன்ற இடங்களில் மீன்பிடித் தொழில் முக்கியத் தொழிலாக உள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பாரிட் புந்தார் நகர வளாகம் (Parit Buntar City Center); வணிகத்திற்கும் தொழில்துறைக்கும் முதன்மை வகிக்கின்றது.
பேராக் மாநிலத்தில் ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். பேராக் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியை உள்ளடக்கியது. இதன் வடக்கே பினாங்கு; கெடா மாநிலங்கள் உள்ளன. முக்கிய நகரம் பாரிட் புந்தார். கிரியான் மாவட்டம் 8 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அவையாவன:
பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் கிரியான் லாருட் மக்களவைத் தொகுதியில் இருந்து பாரிட் புந்தா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P046 | 1974–1978 | சுலைமான் தாயிப் (Sulaiman Taib) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | இட்ரிஸ் அப்துல் ரவுப் (Idris Abdul Rauf) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | அப்துல் ரகுமான் சுலைமான் (Abdul Rahman Suliman) | ||
7-ஆவது மக்களவை | P051 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P054 | 1995–1999 | அப்துல் ரகுமான் சுலைமான் (Abdul Rahman Sulaiman) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | Hasan Mohamed Ali (Hasan Mohamed Ali) |
மாற்று பாரிசான் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | P057 | 2004–2008 | அப்துல் அமீது சைனல் அபிதீன் (Abdul Hamid Zainal Abidin) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | முஜாகித் யூசோப் ராவா (Mujahid Yusof Rawa) |
பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2015 | |||
2015–2018 | அமாணா | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் அரப்பான் (அமாணா) | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | மிசுபாகுல் முனீர் மசுக்கி (Misbahul Munir Masduki) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
68,502 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
53,596 | 77.23% | ▼ - 6.35% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
52,903 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
101 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
592 | ||
பெரும்பான்மை (Majority) |
5,395 | 10.20% | + 2.95 |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [7] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
மிசுபாகுல் முனீர் மசுக்கி (Mohd Misbahul Munir Masduki) |
பெரிக்காத்தான் | 52,903 | 23,223 | 43.90% | + 43.90% | |
முஜாகித் யூசோப் ராவா (Mujahid Yusof Rawa) |
பாக்காத்தான் | - | 17,828 | 33.70% | - 5.52% ▼ | |
இம்ரான் முகமது யூசோப் (Imran Mohd Yusof) |
பாரிசான் | - | 11,593 | 21.91% | - 10.05 % ▼ | |
ரோகிசாஸ் சரீப் (Rohijas Md Sharif) |
பெஜுவாங் | - | 259 | 0.49% | + 0.49% |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)