பாருன் பள்ளத்தாக்கு | |
---|---|
பாருன் பள்ளத்தாக்கின் ஒரு பகுதி |
பாருன் பள்ளத்தாக்கு (बरुण उपत्यका) ஒரு இமயமலை பள்ளத்தாக்கு ஆகும். இது நேபாளம் நாட்டின் மக்காலு மலை அடிவாரத்தில் சங்குவாசபா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி முழுவதும் மக்காலு பாருன் தேசிய பூங்காவில் அடங்கியுள்ளது.[1][2]
பாருன் பள்ளத்தாக்கு அதிர்ச்சி தரும் ஆழமான பள்ளத்தாக்கு ஆகும்.[3] இங்கு உயரமான நீர்வீழ்ச்சிகளும் கீழே பசுமையான காடுகளும் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இங்கு உறைபனிகள் நிறைந்து காணப்படுகிறது. மற்றும் வண்ணமயமான பூக்கள் இவ் வெள்ளை பனி சிகரங்களின் கீழே பூக்கும். இந்த தனித்துவமான நிலப்பரப்பு பூமியிலுள்ள கடந்தகால மலைப்பாங்கான சுற்றுச்சூழல் சிலவற்றைக் கொண்டுள்ளது. அரிய வகை இனங்கள் மற்றும் தாவரங்கள் பல்வேறு காலநிலைகளிலும் வாழ்விடங்களிலும் வளர்ந்து வருகின்றன. இவைகள் மனிதர்களால் எந்த பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.
இந்த பள்ளத்தாக்கு பாருன் ஆற்றின் மூலம் உருவாக்கப்பட்டது. இது குளிர்காலத்தில் பனிப்பாறையாக உறைந்து போகும். இந்ந ஆற்றை உள்ளூர் மக்கள் தங்கள் லிம்பு மொழியில் சுக்சுவா ஆறு என அழைக்கின்றனர். இந்த இடம் முதலில் யோகா இன மக்கள் மற்றும் லிம்பு இன மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
பண்டைய பௌத்த மத புத்தகங்களில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள ஏழு மறைவு பள்ளத்தாக்குகளில் (நஹே-பேயல் கிம்முலாங்) உள்ள எந்தவொரு உயிர்களும் முதிமை இல்லாத மற்றும் மாய கண்கவர் அழகிய பசுமையான இடங்களை கொண்டதாக கருதப்படுகிறது. இவ்வுலகம் பேரழிவு ஏற்படும் போது இங்குள்ள ஏழு மறைவு பள்ளத்தாகில் இருந்துதான் உயிரினங்கள் தோன்றும் என்று இப் புத்தகம் கூறுகிறது. இவைகள் மக்காலு-பாருன் பகுதியில் உள்ளதாக நம்பப்படுகிறது.[4]
இப் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் மக்கள் வாழிடங்கள் அற்றவை. இப்பகுதி முழுவதும் பசும்புற்கள் நிறைந்து காணப்படுகிறது. கோடை காலத்தில் சில முகாம்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் அமைக்கப்படும் முகாம்கள் அமைக்கப்படும் பகுதிகள்:
பாருன் பள்ளத்தாக்கு பகுதிகளில் கிழக்கு இமயமலை அகண்டஇலைக் காடுகள், கிழக்கு இமயமலை ஊசிஇலைக் காடுகள், கிழக்கு இமயமலை அல்பின் புதர் மற்றும் புல்வெளிக் காடுகளைக் கொண்டுள்ளது. தாவரங்கள், விலங்குகள் மற்றும் மக்களுடைய மிகப்பெரிய பன்முகத்தன்மைக்கு இது அடையாளம் காணப்படுகிறது. இந்த பகுதியில் 3000 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.[1] இதில் 25 வகையான ரோதோடெண்டிரன், 47 வகையான மல்லிகை வகைகள், 56 அரிய தாவரங்கள் உள்ளன. 440 வகை பறவைகள், மற்றும் 75 பாலூட்டிகள் ஆகியவையும் அடங்கும். இதில் ஆபத்தான பனிச்சிறுத்தை, சிவப்பு பாண்டா கரடிகள், கஸ்தூரி மான், காட்டுப்பன்றி முதலிய விலங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1]
இந்த குறிப்பிடத்தக்க பல்லுயிர் கொண்ட பகுதி உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மற்றும் சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சிக்காக வாழும் ஆய்வகத்தை வழங்குகிறது. பாருன் பள்ளத்தாக்கு நேபாளம் மற்றும் சீனாவுடனான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் ஒரு பெரிய சர்வதேச பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.[3]
பாருன் பள்ளத்தாக்கு மலையேற்றம் மேற்கொள்ள ஒரு சிறந்த இடம் ஆகும். இது மக்காலு மலையேற்ற முகாம்க்கு செல்லும் வழியில் உள்ளது. சற்றே கடினமான இன்னும் மிகவும் ரசனையை தரும் மலையேற்றமாக இந்த மக்காலு-பாருன் தேசிய பூங்காவின் கரடுமுரடான நிலம் அனுபவங்களை வழங்குகிறது. அண்மையில் இங்கு மலை ஏற்றத்திற்கு வருபவர்களுக்கு உணவு, உபகரணங்கள் வழங்கப்படுகிறது இருப்பினும் பற்றாக்குறை ஏற்படுகிறது.