பார்க் ஹயாத் ஹோட்டல் (சென்னை) (Park Hyatt Chennai) இந்தியாவின் சென்னையிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகும். இது சென்னையின் கிண்டியில் அமைந்துள்ளது. இது அக்டோபர் 1, 2012 இல் திறக்கப்பட்டது.[1] பார்க் ஹயாத்தின் ஹோட்டல்களின் வரிசையில் இது 30 வது ஹோட்டல் ஆகும். குளோபல் ஹயாத் கார்பரேஷன் நிறுவனத்தினால் இந்த ஹோட்டல் நிர்வகிக்கப்படுகிறது.
விஜய் மஹ்டனே எனும் தொழிலதிபரால் இந்த ஹோட்டல் கட்டப்பட்டது. இவர் அம்பத்தூரில் உள்ள துணி வியாபாரத்தின் உரிமையாளர் ஆவார். தனது வணிகத்தினைப் பல்வகைப்படுத்தும் நோக்கில் ஹோட்டல் வணிகம், தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை, அம்பத்தூர் அபிவிருத்தியாளர்களின் உதவியுடன் கட்டினார்.[2] இந்த ஹோட்டலைக் கட்டியது மஹ்டனேவாக இருந்தாலும், இதன் நிர்வாக செயல்பாடுகளை ஹயாத் குழுதான் கவனித்து வருகிறது. இது அக்டோபர் 1, 2012 இல் தொடங்கப்பட்டது.[3] 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிமுக ஹோட்டலுக்கான ஆண்டின் சிறந்த புது ஹோட்டல் விருதினைப் பெற்றது.[3]
11 அடுக்குகளைக் கொண்ட இந்த ஹோட்டல் 201 அறைகளைக் கொண்டது. இந்த அறைகளின் அளவுகள் 43 முதல் 180 சதூர மீட்டர் வரை இருக்கும். இந்த அறைகளில் 20 சூட் அறைகளும் அடங்கும், இவை ஏழு மாடிகள் வரை பரவியுள்ளது. பெருவிருந்தளிக்கும் இடமான 8072 சதுர அடி (747 சதுர மீட்டர்) கொண்ட அறை, ஆறு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கின் கட்டிடக் கலை நிபுணரான ஜார்ஜ் வாங்க் என்பவரால் இந்த ஹோட்டல் கட்டப்பட்டது.[4] ஹோட்டல் முழுவதும் இந்தியத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.[1] இந்த அலங்காரங்கள் வேணு ஜுனேஜா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த நெசவு அலங்காரம் சில்க் துணிகளை ஒரு சுவரிலும், கித்தான் பொருட்களை மற்றொரு சுவரிலும் கொண்டதாகவுள்ளது.[4] ஆறு திறந்தபுறத் தோற்றம் கொண்ட சமையலறைகளுடன், மூன்று நிலைகளுடன் கூடிய உணவுப்பகுதிக்கு “த ஃபிளையிங்க் எலிபென்ட்” (பறக்கும் யானை) என்று பெயர் வைத்துள்ளனர்.
பார்க் ஹயாத் ஹோட்டல் (சென்னை), ஆளுநர் இருப்பிடத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது, கிண்டி வனப்பாதுகாப்புடன் இணைந்துள்ளது. ஹோட்டலில் இருந்து பார்த்தசாரதி கோவில் 11 கிலோ மீட்டர் தொலைவிலும், அஷ்டலக்ஷ்மி கோவில் 9 கிலோ மீட்டர் தொலைவிலும், கபாலீஸ்வரர் கோவில் 10 கிலோ மீட்டர் தொலைவிலும், சாந்தோம் கதீட்ரல் பசிலிக்கா 11 கிலோ மீட்டர் தொலைவிலும், எலியட்ஸ் கடற்கரை 9 கிலோ மீட்டர் தொலைவிலும், மெரினா கடற்கரை 13 கிலோ மீட்டர் தொலைவிலும், எழும்பூர் அருங்காட்சியகம் 10 கிலோ மீட்டர் தொலைவிலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை 14 கிலோ மீட்டர் தொலைவிலும், வள்ளுவர் கோட்டம் 8 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்றும் தக்ஷினா சித்ரா 7 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் காலத்தில் இந்த இடங்கள் சுற்றிப் பார்க்க உகந்தவை.
ஹோட்டலுக்கு அருகே அமைந்துள்ள போக்குவரத்து வசதிகள்: அண்ணா சர்வதேச மற்றும் உள் நாட்டு விமான நிலையம் – 9 கிலோ மீட்டர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் – 15 கிலோ மீட்டர் கோயம்பேடு பேருந்து நிலையம் – 14 கிலோ மீட்டர்
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help); no-break space character in |accessdate=
at position 6 (help); no-break space character in |publisher=
at position 14 (help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help); no-break space character in |accessdate=
at position 6 (help); no-break space character in |publisher=
at position 19 (help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help); no-break space character in |accessdate=
at position 6 (help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help); no-break space character in |accessdate=
at position 6 (help); no-break space character in |publisher=
at position 10 (help)