பார்சன்சைட்டு

பார்சன்சைட்டுParsonsite
போர்ச்சுக்கல் நாட்டின் விசியு மாவட்டம் மேங்குவால்டி பின்கால் சுரங்கத்தில் கிடைத்த மஞ்சள் பழுப்பு நிற பார்சன்சைட்டு கனிமம்]]
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுPb2(UO2)(PO4)2•2H2O
இனங்காணல்
படிக அமைப்புமுச்சரிவு
மேற்கோள்கள்[1]

பார்சன்சைட்டு (Parsonsite) என்பது Pb2(UO2)(PO4)2•2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஈய யுரேனியம் பாசுபேட்டு கனிமம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள். 45% ஈயமும் 25% யுரேனியமும் சேர்ந்து இக்கனிமம் உருவாகியுள்ளது. நீட்சியான மரச்சட்டம் போன்ற போலி ஒற்றைச் சாய்வு படிகங்களாகவும், பல்மைய ஆரப்படிகங்களாகவும், தகடுகளாகவும், தூள் பொதிவுகளாகவும் இது உருவாகிறது. இள மஞ்சள் நிறத்தில் காணப்படும் இக்கனிமத்தின் கடினத் தன்மை மதிப்பு 2.5 முதல் 3 வரை என மோவின் அளவுகோல் தெரிவிக்கிறது. மேலும் பார்சன்சைட்டின் ஒப்படர்த்தி 5.72 முதல் 6.29 வரையாகும்[2][3].

காங்கோ நாட்டின் கட்டாங்கா மாகணத்திலுள்ள சிங்கோலோப்வே சுரங்கத்தில் முதன்முதலாக 1923 ஆம் ஆண்டு பார்சன்சைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழக கனிமவியலாளர் ஆர்த்தர் லியோனார்டு பார்சன்சு கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு பார்சன்சைட்டு என்ற பெயர் வைக்கப்பட்டது[3][4]

மேற்கோள்கள்

[தொகு]