|
பார்ச்சூன் இந்தியா 500 தகுதி வரிசை என்பது சமீபத்திய விற்பனை மற்றும் மொத்த வருவாயின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள முதல் 500 பெரும் நிறுவனங்களின் தொகுப்பாகும். இந்த தகுதிவரிசை ஆண்டுதோறும் பார்ச்சூன் பத்திரிகையினால் வெளியீடப்படுகிறது.[1] பார்ச்சூன் இந்தியாவானது, சீனா, துருக்கி, கொரியா, இந்தோனேசியா, கீரிஸ் ஆகிய நாடுகளின் உள்ளூர் பதிப்புகளைப் தொடர்ந்து வெளிவரும் ஆறாவது சர்வதேச பதிப்பு ஆகும்.[2][3]
பார்ச்சூன் இந்தியா மாதாந்திர பத்திரிக்கையாக ஆங்கிலத்தில் வெளிவருகிறது. இதன் பதிப்பு உரிமமானது பார்ச்சூன்ப திப்பாளர் டைம் குழுமம் மற்றும் இந்தியாவின் பெரிய ஊடக குழுமமான கொல்கத்தாவைச்-சார்ந்த ஏபிபி குழுவிற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மூலம் நடைமுறையில் உள்ளது.[4][5] பார்ச்சூன் இந்தியாவின் முதல் பதிப்பு செப்டம்பர் 2010ல் வெளியிடப்பட்டது.[6][7]
இந்திய எண்ணெய் கழகம் முதலிடமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இரண்டாமிடமும், அடுத்த மூன்று இடங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ராஜேஸ் இண்டஸ்ட்ரீஸ் பெறுகிறது.
இந்திய எண்ணெய் கழகம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இரண்டாவது ஆண்டு பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.[8]
ஜீ பொழுதுபோக்கு நிறுவனங்கள் (#1 ஊடகங்கள், #256 ஒட்டுமொத்த), சன் டிவி நெட்வொர்க் (#2, #347), ஹெச்டி மீடியா (#3, #383), நெட்வொர்க் 18 (#4, #413) மற்றும் டிஷ் டிவி (#5, #437) போன்ற ஊடக நிறுவனங்கள் பார்ச்சூன் இந்தியா 500 பட்டியலில் இந்தியாவின் பெரிய நிறுவனங்களாக திகழ்கிறது.[9]
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (#1 தகவல் தொழில்நுட்பம், #20 ஒட்டுமொத்த), விப்ரோ (#2, #25), இன்போசிஸ் (#3, #27), ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட் (#4, #49), சத்யம் கணினி சேவைகள் (#5, #153) மற்றும் டெக் மஹிந்திரா (#6, #161) போன்ற தகவல்தொழில் நுட்ப நிறுவனங்கள் பார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பெறுகிறது.[10]
இந்த தரவரிசை, உலகம் முழுவதுமுள்ள பெரிய 500 நிறுவனங்கள் நிறைந்த முதல் எட்டு நகரங்களின் பட்டியல் அடிப்படையில் உள்ளது.[11]
வரிசை | நகரங்களில் | பெரிய நிறுவனங்கள் இந்தியா |
---|---|---|
1 | மும்பை | 177 |
2 | டில்லி-என். சி. ஆர் | 111 |
3 | கொல்கத்தா | 38 |
4 | சென்னை | 34 |
5 | பெங்களூர் | 25 |
6 | புனே | 25 |
7 | அகமதாபாத் | 19 |
8 | ஹைதராபாத் | 17 |
இந்திய எண்ணெய் கழகம் பார்ச்சூன் இந்தியா 500 தரவரிசையில் முதலிடம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பட்டியலில் இரண்டாவது இடமும். அடுத்த மூன்று இடங்களில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் முறையே வருகிறது.[12]
{{cite web}}
: |last=
has generic name (help); More than one of |author=
and |last=
specified (help)
{{cite web}}
: More than one of |author=
and |last=
specified (help)