பார்த்தா சாட்டர்ஜி
Chatterjee | |
---|---|
அமைச்சர், மேற்கு வஙகாள அமைச்சரவை | |
பதவியில் 10 மே 2021 – 28 சூலை 2022 | |
ஆளுநர் | எம். கே. நாராயணன் ஜகதீப் தன்கர் |
துறைகள் | வணிகம் & தொழில் துறை மற்றும் தொழில் முனைவோர் |
முன்னையவர் | நிருபம் சென் அமித் மித்திரா சைலேன் சர்க்கார் டாகடர் தேபேஷ் தாஸ் |
பதவியில் 20 மே 2011 – 20 டிசம்பர் 2012 | |
பதவியில் 20 மே 2014 – 10 மே 2021 | |
ஆளுநர் | ஜகதீப் தன்கர் |
துறைகள் | கல்வித் துறை |
முன்னையவர் | பிராத்திய பாசு |
பின்னவர் | பிராத்திய பாசு |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2001 | |
முன்னையவர் | நிர்மல் முகர்ஜி |
தொகுதி | பெஹாலா மேற்கு சட்டமன்றத் தொகுதி |
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் | |
பதவியில் 21 செப்டம்பர் 2006 – 13 மே 2011 | |
Deputy | அபு அசீம் கான் சௌத்திரி |
முன்னையவர் | பங்கஜ் குமார் பானர்ஜி |
பின்னவர் | சூரிய காந்த மிஸ்ரா |
தொகுதி | பெஹாலா மேற்கு சட்டமன்றத் தொகுதி |
பொதுச் செயலாளர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
பதவியில் 1998–2022 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தகவல் தொழில்நுட்பம் & மின்னணுவியல் 6 அக்டோபர் 1952 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
இறப்பு | தகவல் தொழில்நுட்பம் & மின்னணுவியல் நாடாளுமன்ற விவகாரத்துறை |
இளைப்பாறுமிடம் | தகவல் தொழில்நுட்பம் & மின்னணுவியல் நாடாளுமன்ற விவகாரத்துறை |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | சுயேட்சை (ஆகஸ்டு 2022 முதல்) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (1998--2022) இந்திய தேசிய காங்கிரசு (1998 வரை) |
துணைவர்கள் | மறைந்த (பாப்லி) ஜெயசிறீ சாட்டஜி [1] |
பிள்ளைகள் | சோகினி சட்டர்ஜி[2] |
பெற்றோர் |
|
வாழிடம்s | கொல்கத்தா |
முன்னாள் கல்லூரி | கொல்கத்தா பல்கலைக்கழகம், இளங்கலை பட்டம்]], முதுநிலை வணிக நிர்வாகம் பட்டம் |
பார்த்தா சாட்டர்ஜி (Partha Chatterjee) (பிறப்பு: 6 அக்டோபர் 1952), இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் பொதுச் செயலளாரகவும், மேற்கு வங்க மாநில அமைச்சராகவும், இந்திய அரசின் அமலாக்க இயக்குனரகத்தால் பள்ளி ஊழியர் நியமன ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் வரை ஆகத்து 2022 முடிய பதவியில் இருந்தவர்.[3] இவர் பெஹாலா மேற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு சார்பாக 2001-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 2021 முடிய தொடர்ந்து ஐந்து முறை மேற்கு வங்காள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இறுதியாக சாட்டரஜி மேற்கு வங்காள அரசின் வணிகம் & தொழில் துறை அமைச்சராக இருந்த போது 28 சூலை 2022 அன்று, பள்ளி ஊழியர்கள் நியமன ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதால், அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டதுடன், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
அமைச்சர் பார்த்தா சாட்டஜி, மேற்கு வங்காள மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில், கையூட்டாக பெற்ற 50 கோடி ரூபாய் பணம் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்பு தங்கத்தை, அவரது உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டிலிருந்து 28 சூலை 2022 அன்று அமலாக்க இயக்குனரகத்தால் கைப்பற்றப்பட்டது. இதனால் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார்.[4] எனவே பார்த்தா சாட்டர்ஜி அமைச்சர் பதவியிலிருந்தும், திருணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.[5][6] 5 ஆகஸ்டு 2022 அன்று பார்த்தா சாட்டஜியையும், அவரது உதவியாளரான அர்பிதா முகர்ஜியை சிறையில் அடைத்தனர்.[7]
ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், பார்த்தா சாட்டர்ஜிக்கு சொந்தமான ரூபாய் 48.22 கோடி மதிப்புள்ள சொத்துகளை 19 செப்டம்பர் 2022 அன்று முடக்கி அமலாக்க இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.[8]