பார்பரா முசியெட்டி | |
---|---|
பிறப்பு | திசம்பர் 22, 1971 விசென்டே லோபஸ், பியூனஸ் அயர்சு, அர்கெந்தீனா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1996–இன்று வரை |
உறவினர்கள் | ஆண்டி முசியெட்டி (சகோதரன்) |
பார்பரா முசியெட்டி (ஆங்கிலம்: Barbara Muschietti) (பிறப்பு: திசம்பர் 22, 1971) என்பவர் அர்கெந்தீனா நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தயாரிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படமான 'மம்மா' மற்றும் ஸ்டீபன் கிங் எழுதிய 'ஈட்' நாவலை அடிப்படையாக கொண்டு 2017 மற்றும் 2019 வெளியான 'ஈட்' மற்றும் 'ஈட்: சாப்டர் 2' ஆகிய படங்களை தயாரித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானர், இவை அனைத்தும் இவரது சகோதரர் ஆண்டி முசியெட்டியால் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[1] இவர் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத் திரைப்படமான தி பிளாஷ்[2] என்ற படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.[3][4]
இவர் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் எழுத்தாளர் ஆர்தர் பிலிப்சு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆண்டு | தலைப்பு | தயாரிப்பாளர் | திரைக்கதை ஆசிரியர் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2008 | மம்மா | ஆம் | இல்லை | குறும்படம் |
2013 | மம்மா | ஆம் | ஆம் | இயக்குநராக அறிமுகம் |
2017 | ஈட் | ஆம் | இல்லை | |
2019 | ஈட்: சாப்டர் 2 | ஆம் | இல்லை | |
2020 | லாக் அண்ட் கீ | ஆம் | இல்லை | நெற்ஃபிளிக்சு தொடர். |
2023 | தி பிளாஷ் | ஆம் | இல்லை |