பார்வதி மலை Parvati Hill | |
---|---|
பார்வதி மலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,100 அடி (640 m) |
ஆள்கூறு | 18°29′50″N 73°50′48″E / 18.49722°N 73.84667°E |
புவியியல் | |
மூலத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலை |
ஏறுதல் | |
எளிய வழி | மலைக்கு 108 படிகள் உள்ளன, இது மலையின் உச்சிக்கு செல்லும் வழி. |
பார்வதி மலை (Parvati Hill) இந்தியாவின் புனேவில் அமைந்துள்ள ஒரு சிறுகுன்று ஆகும். கடல் மட்டத்திற்கு மேல் 2,100 அடிகள் (640 m) உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் ஒரு பார்வதி கோயில் உள்ளது. இக்கோயில் புனேவில் உள்ள மிக அழகிய இடங்களில் ஒன்றாகும். பேசுவா வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்ட இந்த கோவில் புனேவில் உள்ள பழமையான பாரம்பரிய கட்டிடமாக திகழ்கிறது.[1] பார்வதி மலை என்பது பார்வையாளர்களுக்கு புனேவின் பரந்த காட்சியை வழங்கும் ஒரு கண்காணிப்பு இடமாகும். வெட்டல் மலையை அடுத்து புனேவின் இரண்டாவது உயரமான இடமாகக் கருதப்படுகிறது. மலையில் 108 படிகள் (இந்து மதத்தில் புனித எண் என்று கருதப்படுகிறது) கோயில் அமைந்துள்ள மலையின் உச்சிக்கு செல்கிறது. தவாரே என்ற கிராமத் தலைவருக்கு இம்மலை சொந்தமானதாகும். சிவன் கோயிலைக் கட்டுவதற்காக பேசுவா மலையை வாங்கினார். அதன்பிறகு, அங்கு இந்த கோவில் வளாகத்தைக் கட்டினார்.
முக்கிய கோவில் தேவதேசுவரா கருங்கல்லால் ஆனது. இது 1749 ஆம் ஆண்டு பாலாசி பாசி ராவால் கட்டி முடிக்கப்பட்டது. 1760 ஆம் ஆண்டு கோயிலில் ஒரு தங்க சிகரம் சேர்க்கப்பட்டது. மற்ற கோவில்கள் விட்டல் மற்றும் ருக்மணி, விஷ்ணு மற்றும் கார்த்திகேயா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
பார்வதி மலையில் 5 கோவில்கள் உள்ளன: [2]
சூரியன் (சூரியன்) மற்றும் பவானி மந்திர் கோவில்களுடன், கோவில்கள் காலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10:00 மணிக்கு மூடப்படுகின்றன.
கோயிலைத் தவிர இங்கு பேசுவா அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆயுதங்கள், நாணயங்கள், பாத்திரங்கள், மரத்தாலான தளவாடங்கள், போக்குவரத்து முறைகள் (பல்லக்கு) மற்றும் பேசுவாக்களின் காலத்திலிருந்து பெறப்பட்ட பரிசுகள் போன்றவை உள்ளன. [3]
பாலாசி பாசி ராவ் தனது வாழ்க்கையின் கடைசி தருணத்தை கழித்த பகுதியும் இங்கு அமைந்துள்ளது.
பார்வதி தண்ணீர் தொட்டி புனே நகரின் பாதி பகுதிக்கு தண்ணீர் வழங்குகிறது.
மலையின் பாதி வழியில் தென்கிழக்கு பகுதியில் ஒரு பழைய புத்த குகை உள்ளது. முடிக்கப்படாவிட்டாலும், இது பாடலேசுவர் குகைகளுக்கு சமகாலம் என்று நம்பப்படுகிறது.