பாலக்காடு சிறீராம் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | கே. எல். சிறீராம் |
பிறப்பு | 16 பெப்ரவரி 1972 பாலக்காடு |
தொழில்(கள்) | இசைக்கலைஞர் |
இசைக்கருவி(கள்) | புல்லாங்குழல் |
இசைத்துறையில் | 1996 - தற்போது வரை |
பாலக்காடு ஸ்ரீராம் (Palakkad Sreeram, பிறப்பு: 16, பிப்ரவரி, 1972) என்பவர் ஓர் இந்திய திரைப்பட பாடகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறார். படையப்பாவில் வெற்றிக் கொடி கட்டு, ஸ்லம்டாக் மில்லியனரில் லிக்விட் டேன்ஸ்சும் இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.[1]
ஸ்ரீராம் 16 பிப்ரவரி 1972 அன்று ஒரு தமிழ் ஐயர் குடும்பத்தில் கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தின், ஆலத்தூர் அருகே உள்ள காவச்சேரி கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஜெயலட்சுமி, கே. எஸ். லட்சுமி நாராயணன் ஆகியோர் ஆவர். இவர் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் இசையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் இசையில் சாதிக்க சென்னைக்குச் சென்றார்.[2] பாடகரும், இசையமைப்பாளருமான பேபி என்பவரை மணந்தார்.[3] இந்த இணையருக்கு பாரத், அனகா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஸ்ரீராமுக்கு "ஸ்வரர்ணவம்" என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோ உள்ளது.[4]
ஸ்ரீராம் சிறு வயதிலிருந்தே தனது தாயிடமும், சுந்தரேஸ்வர பகவதரிடமும் இசை கற்கத் தொடங்கினார். இவருக்கு இசைக்கருவிகள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது.[5] தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல திரைப்படப் பாடல்கள் பாடிய [6] ஸ்வரர்ணவம் என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்திருக்கும் இவர், மலையாள படங்களான மஹமேகா பிரவுகல் மற்றும் மெல்விலாசம் செரியானு ஆகிய இரு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். திருமணமான உடனேயே 1995 இல் சென்னை சென்றார். இவர் தானாகவே புல்லாங்குழல் கற்றுக்கொண்டார். 1996 ஆம் ஆண்டில் திரையுலகில் புல்லாங்குழல் கலைஞராக அறிமுகமானார்.[7][8]
ஆண்டு | படம் | மொழி | பாடல் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1998 | உயிரே | தமிழ் | தைய்ய தைய்யா | தில் சேவின் தமிழ் மறுஆக்கமான, உயிரே |
1999 | படையப்பா | தமிழ் | மின்சாரப் பூவே பெண் பூவே | |
வெற்றிக் கொடி கட்டு | ரஜினிகாந்த் | |||
தாஜ்மகால் | தமிழ் | திருப்பாச்சி அருவாள | ||
2002 | இவன் | தமிழ் | உலகமே நீ | |
2003 | சாமி | தமிழ் | திருநெல்வேலி அல்வாடா | |
2004 | சத்ருவ் | தெலுங்கு | ||
வெங்கி | ||||
மன்மதன் | தமிழ் | வானமென்ன | ||
2009 | ஸ்லம்டாக் மில்லியனர் | இந்தி | லிக்விட் டான்ஸ் | ஆஸ்கார் விருது பெற்ற படம் |
2012 | அட்டகத்தி | தமிழ் | பொடி வெச்சி புடிப்பேன் | |
மதுபான கடை | சமரசம் உலாவும் | தனிப் பாடகர் | ||
தல்சமயம் ஓரு பெங்குட்டி | மலையாளம் | ஓ திங்கல் பக்ஷி | ||
2013 | அத்தாரிண்டிகி தாரேதி | தெலுங்கு | தேவ தேவம் | |
வல்லினம் | தமிழ் | வல்லினல் | ||
2014 | பூஜை | தமிழ் | ஒடி ஓடி | தனிப் பாடகர் |
மகாலட்சுமி கட்டாக்ஷம் | தெலுங்கு | கானானா கான் கானிதா | ||
2015 | கே.எல் 10 பத்து | மலையாளம் | என்தானு கல்பே | |
தி ரிப்போர்டர் | நீ என் கதரே | |||
வர்மதியே | ||||
சவாலே சமாளி | தமிழ் | சவாலே சமாளி | தனிப் பாடகர் | |
2016 | வல்ல தேசம் | தமிழ் | மேகம் கலைவதில்லை | தனிப்பாடகர் |
2017 | மாம் - மலையாளம் | மலையாளம் | குக்கே கான் | |
2018 | கான்டெஸா (படம்) | மலையாளம் | தக்கா தக்கா | தனிப் பாடகர் |
2020 | அனாமிகாவின் ஆத்மா | மலையாளம் | க்ரீஸ்ஜ்மேம் சாகி |