பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் (10 ஜூன் 1912 - மே 30, 1981) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். இவரை நேயர்கள், 'கலியுக நந்திகேசுவரர்' என்று செல்லப் பெயரால் அழைத்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் பழைய கல்பாத்தி கிராமத்தில் இவர் பிறந்தார். பெற்றோர்: டி. ஆர். சேசம் பாகவதர் - ஆனந்தம்மா. தனது 7 ஆவது வயதில், மிருதங்க இசைப் பயிற்சியை சாத்தபுரம் சுப்பய்யரிடம் பெற ஆரம்பித்தார்; தனது தந்தையின் நண்பர் விசுவநாத ஐயரிடமும் மிருதங்கம் கற்றார். 10 வயது நிரம்பியபோது தன் அப்பாவுக்கும், மற்ற கதாகாலக்சேபக் கலைஞர்களுக்கும் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்துவிட்டார். தனது 15 ஆவது வயதில் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் மாணவர் ஆனார்.
செம்பை வைத்தியநாத பாகவதரின் இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்த பிறகு இவர் புகழடையத் தொடங்கினார். 1940 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக நியமனம் செய்யப்பட்டார். கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்திய 'ரிசிவாலி' பள்ளியில் (சித்தூர்) 1979 ஆம் ஆண்டு இசை பயிற்றுனராகச் சேர்ந்தார்.
இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்:
இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:
சங்கீத கலாநிதி மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்ற முதல் மிருதங்க இசைக் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு.
{{cite web}}
: Cite has empty unknown parameter: |1=
(help)