பாலாசு

பிரேசிலிய பாலாசு

பாலாசு (Ballas) என்பது வைரத் தொழில்துறையின் ஒரு சொல்லாகும். சுருக்கமாக இதை பார்ட்டு என அழைக்கலாம். பெரும்பாலும் பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் வெட்டப்படுகிறது.[1] மணிக்கல் அல்லாத இவ்வைரம் தோராயமாக கோளத் துண்டுகளாகக் காணப்படுகிறது.

பாலாசு என்பது வைரத் துகள்களின் தொகுப்பாகும், இது கதிர்வீச்சு கட்டமைப்புடன் தோராயமாக கோளக் கல்லாக ஒரு நாரிழை அமைப்புடன் மற்றும் பிளவு தளங்கள் இல்லாமல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. படிக கற்களை விட கடினமான மற்றும் பிளவுபடுத்த மிகவும் கடினமான, பாலாசுகள் தொழில்துறை வைரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. industrial diamond. Encyclopædia Britannica