முகப்பு | |
தென்பசார், பாலி மற்றும் இந்தோனேசியாவில் அமைவிடம் | |
நிறுவப்பட்டது | 1931 |
---|---|
அமைவிடம் | தென்பசார் |
ஆள்கூற்று | 8°39′27″S 115°13′6.7″E / 8.65750°S 115.218528°E |
பாலி அருங்காட்சியகம் (Bali Museum), இந்தோனேசியாவின் பாலியில் தென்பசார் என்னுமிடத்தில் அமைந்துள்ள கலை மற்றும் வரலாற்றின் அருங்காட்சியகமாகும். தென்பசார் பாலியின் தலைநகரமும் ஆகும். இது பாலி தீவில் அமைந்துள்ளது. தென்பசார் பாலியின் முக்கிய நுழைவாயிலாகக் கருதப்படுகிறது.
பாலித் தீவானது இயற்கை இடங்கள், கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள், சமையல் மற்றும் வரலாற்று இடங்கள் போன்ற ஒரு அருங்காட்சியகமாகவே திகழ்கிறது. இவையனைத்யும் ஒரே இடத்தில் காண சிறந்த தேர்வாக பாலி உள்ளது. பாலியில் உள்ள பெரும்பாலான கலைக்கூடங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது ஒரு ஓவிய அருங்காட்சியகம் ஆகும். மேலும், உபுத்தின் சுற்றுலா தலங்களில் அமைந்துள்ள பாலியில் உள்ள ஓவியம் அருங்காட்சியகத்திற்கான மைய இடமாக கருதப்படுகிறது. பாலியில் ஒரு ஓவியக் காட்சிக்கூடம் மட்டுமே உள்ளது என்பதற்கு மாற்றாக அதில் மேலும் பல சிறப்புக்கூறுகள் உள்ளன. அத்தகையினைப் பெறுவது தென்பசாரில் உள்ள அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் டென்பசார் பாலி மாகாண அரசு அருங்காட்சியகம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது பாலி மாகாண அரசால் நிர்வகிக்கப்படுகிறது.
பாலி மாகாண அரசு அருங்காட்சியகத்தை அமைப்பதற்கான ஆரம்ப காலத் திட்டமானது WFJ க்ரூன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. அவர் ஒரு வெளிநாட்டவர். அவர் 1909 ஆம் ஆண்டு முதல் 1913 ஆம் ஆண்டு வரை தெற்கு பாலியில் உதவி குடியிருப்பாளராக பணியாற்றியவர் ஆவார். ஆரம்பத்தில் 1910 ஆம் ஆண்டில், ஆர்கா கட்டிடத்தின் கட்டுமானப் பணியிலிருந்து தொடங்கியது. மூன்று பேர் ஆர்கா கட்டிடக் கட்டமைப்பின் கட்டடக் கலைஞர்கள் ஆவர். அவர்கள் நான் குஸ்டி கெடே கேதுட் காண்டெல், நான் குஸ்டி கேதுட் ராய், கர்ட் கிரண்ட்லர் (ஜெர்மன் குடிமகன்) ஆகியோர் ஆவர். பாலி நகரின் மன்னர்களால் ஆர்கா கட்டட அமைப்பின் கட்டுமானத்திற்கு நிதி வழங்கப்பட்டது. அக்காலகட்டத்தில் அந்த மன்னர்களின் ஆட்சி இருந்து வந்தது.தபனன் மன்னன் தொடங்கி, புலேலெங்கின் மன்னன், கரங்கசெம் மன்னன் ஆகியோர் அப்போது ஆட்சி செய்து வந்தனர். 1930 ஆம் ஆண்டில், பழைய பாலினீஸ் பணித் துறையில் பணி புரிந்தவரான டபிள்யூ.டி. ஸ்டூட்டர்ஹிம் என்பவர் இனவழி பாரம்பரியப் பாணியில் அந்தக் கட்டடத்தின் பணிகளை நிறைவு செய்ய பெரும் பங்களித்தார். அருங்காட்சியகத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் 1932 ஆம் ஆண்டில் ஒரு அமைப்பு ஓர் அடித்தள நிலையில் உருவாக்கப்பட்டது. டிசம்பர் 8, 1932 அன்று, டென்பசாரில் உள்ள பாலினீஸ் அருங்காட்சியகத்தின் திறந்துவைக்கப்பட்டது.[1]
பாலி அருங்காட்சியகம் முதலில் 2,600 சதுர மீட்டர் நிலப்பரப்பை மட்டுமே கொண்டு அமைந்திருந்தது. இந்த அருங்காட்சியகத்தில் வெளிப்புற முற்றம், மத்திய உள் முற்றம் மற்றும் உள் முற்றத்தில் மூன்று கட்டிட பிரிவுகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு முற்றத்தின் பகுதியிலும் சுவர்கள் பிணைக்கப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொரு முற்றமும் ஒரு நுழைவு வாயிலோடு இணைக்கப்பட்டுள்ளது. உட்புற முற்றத்தில், மூன்று கட்டிடங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டிடமும் அருங்காட்சியகத்தின் கட்டுமானத்திற்கு நிதியளித்த மன்னர் ஆண்டுவந்த பகுதிகளின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டன. அவை முறையே கரங்கசெம் கட்டிடம், தபனன் கட்டடம், மற்றும் புலேலெங் கட்டிடம் என்பனவாகும். இந்தோனேசியா நாட்டின் சுதந்திர தினத்தன்று இந்த அருங்காட்சியகத்தின் நிர்வாகம் பாலியின் மாகாண நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் ஜனவரி 5, 1965 ஆம் நாளன்று, இந்தோனேசிய அரசு அதன் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டது. பின்னர் அப்பொறுப்பினை கல்வி மற்றும் கலாச்சாரத் துறை அலுவலகங்கள் ஏற்றுக்கொண்டன. பின்னர் கல்வி மற்றும் கலாச்சார அலுவலகங்கள் துறை இந்த அருங்காட்சியகத்திற்கு பாலி மாநில அரசு அருங்காட்சியகம் என்ற பெயர் சூட்டியது.[1]
பாலி அருங்காட்சியகமானது, 1931 ஆம் ஆண்டில் கட்டிடக் கலைஞர் பி.ஜே.மூஜென் என்பவரால் கட்டப்பட்டது. தென்பசாரில் முன்னாள் அரச அரண்மனை இருந்த இருப்பிடத்திற்கு அருகில் இது உள்ளது. அது 1906 ஆம் ஆண்டில் டச்சு தலையீட்டின் காரணமாக பாலி ஒட்டமொத்தமாக அழிக்கப்பட்டதாகும். மேலும் அதன் வெளிப்புற சுவர்களுக்காகவும் முற்றங்களுக்காகவும் ஒரு முன்மாதிரியாக அமைந்து விளங்குகிறது.[2]
பாலி அருங்காட்சியகத்திற்குள் நான்கு முக்கிய கட்டிடங்கள் காணப்படுகின்றன, தபனன் நாடக முகமூடிகள் மற்றும் இசைக்கருவிகள், கரங்கசெம் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள், புலேலெங் ஜவுளி மற்றும் திமூர் தொல்பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]
இதுதென்பசாரின் மத்திய சதுக்கத்தின், தமன் புபுட்டான் என்னும் பகுதியின், கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. .[2]